பாக்டீரியாக்கள்
மனித உடலில் டிரில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. அவை நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. அவை இல்லாவிட்டால் நமது நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படலாம்.
மிக வேகமான தசை
மனித உடலில் மிக வேகமாக இயங்கும் தசை கண்களில் உள்ள ஆர்பிகுலரிஸ் ஓக்குலி தான். இது ஒரு வினாடியில் 1/100 க்கும் குறைவான நேரத்தில் சுருங்கும் திறன் கொண்டது.
நரம்புகள்
1,00,000 மைல்கள் நீளக்கூடிய நரம்புகள், தமனிகள், நுண்குழாய்கள் மனித உடலில் உள்ளன. உடலின் அனைத்து பகுதிக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்ல இவை பயன்படுகின்றன.
பச்சை கண்கள்
மக்கள் தொகையில் இரண்டு சதவிகிதம் பேர் மட்டுமே பச்சைக் கண்களைக் கொண்டுள்ளனர். அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு ஐரோப்பாவில் பச்சைக் கண்கள் கொண்டவர்கள் அதிகம்.
மரபணு மாற்றம்
மனிதர்களிடையே காணப்படும் வெளிப்புற மற்றும் உள்புற வித்தியாசங்களுக்குக் காரணம் மரபணுவில் நிகழும் ஒரு சிறிய வேறுபாடு மட்டுமே.
தோலின் சிறப்பு
நமது உடல் எடையில் 15 சதவிகிதம் தோலில் உள்ளது. ஆனால் இதன் முக்கியத்துவம் மிகக் குறைவாகவே உணரப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் தோலின் பங்கு மிக முக்கியமானது.
கொட்டாவியின் மர்மம்
நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம் என்பதற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சிலர் அதிக ஆக்ஸிஜனைப் பெற உதவுகிறது என்று சொல்வார்கள். சிலர் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்பார்கள். ஆனால், கொட்டாவி விடுவது ஏன் என்று அறிவியல்பூர்வமான நிரூபணம் இன்னும் கிடக்கவில்லை.
புதிர் போடும் கண்கள்
நம் மூக்கும் காதுகளும் வாழ்நாள் முழுவதும் வளர்ந்துகொண்டே இருந்தாலும், கண்கள் மட்டும் பிறப்பிலிருந்து கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கும். பிறந்த மூன்று மாதங்களுக்குள், கண்ணின் கார்னியாக்கள் அவற்றின் முழு அகலத்தை அடைந்துவிடும்.
சுவாசத்தில் சுவாரஸ்யம்
ஒரே நேரத்தில் சுவாசிக்கவும் விழுங்கவும் முடியாது. இது உணவு உட்கொள்ளும்போது தற்செயலாக ஏற்படும் மூச்சுத் திணறலைத் தவிர்ப்பதற்கு உதவுகிறது.
செல் உற்பத்தி
மனித உடலில் ஒவ்வொரு நொடியும் 25 மில்லியன் செல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு புதிய உயிரணுவும் டிஎன்ஏ டெம்பிளேட் அடிப்படையில் மீண்டும் உருவாக்கப்படுகிறது.