சுவை கண்டு ஏமாறாதீங்க.. இதயத்தை பாதிக்கும் இந்த '3' உணவுகளை சாப்பிட்டா உயிருக்கே ஆபத்து
நாம் உண்ணும் உணவுகளில் இருந்து பயன்படுத்தும் பொருள்கள் வரை உடலுக்கு ஏதேனும் ஒருவகையில் தாக்கத்தை கொடுக்கக் கூடியவை. உதாரணமாக அதிகமான அளவில் துரித உணவுகள், இனிப்புகள் உண்பவர்களுக்கு உடல் பருமனை குறைப்பது கடினம். மது அருந்துபவர்களின் உடல்நலம் சொல்லவே வேண்டாம். நாம் அறிந்ததே. இந்த பதிவில் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் 6 பொருள்களை குறித்து இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் பகிர்ந்த விஷயங்களை இங்கு காணலாம்.
27
இதய நோய்:
உலகம் முழுக்க ஏற்படும் இறப்புகளில் இதய நோயும் முக்கிய காரணம். கிட்டத்தட்ட ஒவ்வொர்ஜ் ஆண்டும் 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதய கோளாறுகளால் உயிரிழக்கின்றன. நான் பின்பற்றும் சில ஆரோக்கியமற்ற பழக்கங்கள் தான் இதய நோய்க்கு காரணம் என இதய நிபுணர்கள் கூறுகின்றனர். லண்டனை சேர்ந்த இதய சிகிச்சை நிபுணர் ஒருவர் தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்த சில தகவல்களில் இதை விளக்கமாக கூறியுள்ளார்.
37
உணவில் கவனம்
நாம் மனிதன் செயற்கையாக தயாரிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதை தவிர்த்து இயற்கையில் விளையும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், முட்டை, அசைவ உணவுகளான மீன் உள்ளிட்டவை உண்ணலாம். சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை மாவில் செய்யப்படும் பாஸ்தா, நூடுல்ஸ் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். முழுதானியங்கள் செய்யப்பட்ட சப்பாத்தி, நூடுல்ஸ் சாப்பிடலாம். இந்த உணவுகளை எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவு ஆயுள் கூடுமாம்.
47
மவுத்வாஷ்:
மவுத்வாஷ் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் என மக்கள் நினைக்கின்றனர். ஆனால் ஆல்கஹால் கலந்த மவுத்வாஷ் இரத்த அழுத்தத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. நம் வாயில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் தான் நைட்ரிக் ஆக்சைடை உடலில் உற்பத்தி செய்ய உதவியாக உள்ளன. இவை தான் இரத்த நாளங்களை விரிவுபடுத்தி, இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும் பணியில் இருப்பவை. ஆல்கஹால் கலந்த மவுத்வாஷ் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் நல்ல பாக்டீரியாக்களும் கொல்லப்படுகின்றன. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அவர் கூறினார். உயர் இரத்த அழுத்தம் ஏற்கனவே இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
57
குடிப்பழக்கம்:
நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்குமே மது அருந்துவது நச்சுத்தன்மையானது. உடலை மோசமாக பாதிக்கும். நீங்கள் வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இரவில் ஒருமுறை என எப்படி நீங்கள் குடித்தாலும் உடலுக்கு கேடுதான். உங்கள் உடலை ஆரோக்கியமான வைக்க நினைத்தால் குடியை விடுங்கள்.
புகைபிடிக்கும்போது இரத்த நாளங்களின் உட்புறம் பாதிக்கப்படுகிறது. இதனால் இதயம் மட்டுமின்றி மூளையும் பாதிப்புக்குள்ளாகிறது. மாரடைப்பு, பக்கவாதம் வர கூட வாய்ப்பை ஏற்படுத்துகிறது. சிகரெட்டில் உள்ள நிக்கோடின் இரத்த நாளங்களை சுருங்க செய்து இரத்த அழுத்த அளவை உயர்த்துகிறது. அதனால் புகைப்பிடிப்பதை விடுங்கள்.
மதுவை போலவே கூல்ட்ரிங்க்ஸ் உடலுக்கு கேடானவை. இதில் அதிக கலோரி உள்ளன. சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்கள் மக்கள் அறியாமல் நிறைய கலோரிகளை எடுத்து கொள்ள வழிவகுக்கிறது.