
சர்க்கரை நோய் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. உண்மையில், இது ஒரு வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சனைகளில் ஒன்றாகும். அத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவு மற்றும் குடிக்கும் பானத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மேலும் பல விஷயங்களை தவிர்க்க வேண்டும். அவற்றில் முதலில் இருப்பது சர்க்கரை தான். சர்க்கரை காரணமாக சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க செய்யும். இதனால் அவர்களது நிலைமை மோசமாகிவிடும். சர்க்கரை கலந்த டீ கூட குடிப்பது அவர்களுக்கு நல்லதல்ல.
உண்மையில், டீ பலரும் விரும்பி குடிக்கும் ஒரு காலை பானம் ஆகும். இன்னும் சொல்லப் போனால், பலரது அன்றாட வழக்கத்தில் ஒரு பகுதியாக இது இருக்கிறது. அது வேலை பார்க்கும் இடமாக இருந்தாலும் சரி, நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது இருந்தாலும் சரி அவர்களுடன் டீ குடிப்பதை பலரும் விரும்புகிறார்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நபர் சர்க்கரை கலந்த டீ குடிக்க முடியவில்லை என்பதற்காக வெல்லும் கலந்து குடிக்கலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகள் வெல்லம் கலந்த டீ குடிக்கலாமா? இது அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதா? இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, உண்மையில் சர்க்கரை நோயாளிகள் எந்தவிதமான இனிப்பு பொருட்களையும் சாப்பிடவே கூடாது. அது அவர்களது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சொல்லப் போனால் அதில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், சத்தாக
இருந்தாலும் கூட சர்க்கரை நோயாளிகள் அவற்றை சாப்பிடக்கூடாது. அவற்றில் ஒன்றுதான் வெல்லம், ஆம், வெல்லம் ஒரு இயற்கையான இனிப்பாகும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் போன்ற பலவிதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால் வெல்லத்தில் குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் நிறைந்துள்ளதால், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்க செய்யும் தெரியுமா? அதுமட்டுமின்றி வெல்லத்தில் கிளைசெமிக் குறியீடு 60-70 வரை உள்ளதால், இது சர்க்கரை அளவை இன்னும் மோசமாக பாதிக்கும்.
உண்மையில், வெல்லம் சர்க்கரையின் செறிவூட்டப்பட்ட மூலம் என்பதால் அதை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் போது சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கும். அதுவும் குறிப்பாக உங்களது சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அதனால் உடலில் இன்சுலின் அளவு பாதிக்கப்படும். ஒருவேளை உங்களது ரத்த சர்க்கரையை கட்டுக்குள் இருந்தால் நீங்கள் அவ்வப்போது மிகவும் குறைந்த அளவில் மட்டும் வெல்லம் கலந்த டீ குடிக்கலாம். ஆனால் வெல்லம் கலந்த டீ குடிப்பதற்கு முன்பாக கண்டிப்பாக ஒரு நல்ல மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: சுகர் இருக்கா? உங்களுக்கான பெஸ்ட் காலை உணவுகள் இதுதான்!!
சர்க்கரை நோயாளிகள் இனிப்புகள் மீது ஏக்கம் இருந்தால் அவர்கள் ஆரோக்கியமான முறையில் அதை எடுத்துக் கொள்ளலாம். அதாவது பால் டீக்கு பதிலாக மூலிகை டீ குடிக்கலாம். இது தவிர சர்க்கரைவள்ளி கிழங்கு, ஆப்பிள் போன்ற ஆரோக்கியமானதை சாப்பிடலாம்.
இதையும் படிங்க: வேப்பிலை '4' போதும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த; எப்படி சாப்பிடனும் தெரியுமா?