இந்தியாவில் கோடை காலம் மிகவும் தொந்தரவாக இருக்கும். அதுவும் இந்தாண்டு கொளுத்தும் வெயிலில் மக்கள் பெரும் அவதிபட்டுவிட்டனர். இதனால் சில வீடுகளில் ஏசியை ஆப் செய்யாமல் நாள் முழுக்க இயங்க வைத்துள்ளனர். இதனால் கரண்டு பில் ஒரு பக்கம் எகிற உடல் நலமும் பாதிக்கிறது.
வெப்பநிலை அதிகரிக்கும் போது, ஏசியின் தேவை அதிகரிக்கிறது. அலுவலகமாக இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, கார், பஸ், ரயில் என எங்கு இருந்தாலும் ஏசியில் இருக்க சிலர் விரும்புகிறார்கள். ஏசியில் வரும் சில்லென்ற காற்று நமக்கு ரிலாக்ஸாக இருக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக ஏசி உபயோகம் செய்வது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.
என்னென்ன பாதிப்புகள்?
உடலை வாட்டும் வெப்பத்தில் இருந்து ஏசி நம்மை காப்பாற்றும். ஆனால் ஏசி அறை அல்லது ஏசி இருக்கும் காரில் அதிக நேரம் இருப்பதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
வறண்ட உதடு
ஏர் கண்டிஷனரின் காற்று நம்முடைய வாயை வறண்டு போக செய்கிறது. அதிகமாக ஏசி காற்றில் இருக்கும்போது உங்களுடைய வாய் வறண்டு, எரிச்சல் ஏற்படலாம். இதை தடுக்க நீங்கள் அவ்வப்போது ஏசி அறையை விட்டு வெளியே செல்ல வேண்டும்.
நீரிழப்பு
ஏசி அறையில் இருக்கும் போது உடலில் உள்ள ஈரப்பதம் விரைவில் ஆவியாகும். இதனால் அடிக்கடி தாகம் ஏற்படும். உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்.
தலைவலி
ஏசி அறையில் அதிக நேரம் செலவிடுபவர்களுக்கு தலைவலி மாதிரியான பிரச்சனைகள் வரும். ஏசியின் வெப்பநிலையை சாதாரணமாக வைத்திருக்க வேண்டும்.
சோர்வு
எப்போதும் ஏசி அறை, காரில் இரவும் பகலும் இருப்பவர்கள் ஏசியில் இல்லாத மற்றவர்களை காட்டிலும் அதிக சோர்வையும் பலவீனத்தையும் சந்திக்க நேரிடும்.