பிரபஞ்சத்தின் முதல் உதட்டு முத்தம்.. எங்கு தோன்றியது தெரியுமா? வியக்க வைக்கும் தகவல்கள்!!

First Published May 23, 2023, 6:28 PM IST

உலகத்தின் முதல் உதட்டு முத்தம் கொடுக்கப்பட்ட வரலாறு தெரியுமா? முத்தம் குறித்த சுவாரசிய தகவல்கள்..  

அதீதமான அன்பை வெளிப்படுத்தவும், பொங்கி வழியும் காதலை துணையிடம் நீட்டவும் முத்தங்கள் உதவும். முத்தம் உணர்ச்சிகளின் வடிகால். அன்பின் ஏக்கத்தின் சிறு துளி. முத்தம் கொடுக்கும் பழக்கம் எப்போது உருவானது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் சில ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பண்டைய மத்திய கிழக்கு பகுதிகளில் 4, 500 வருடங்களுக்கு முன்பாக உதட்டில் முத்தமிடுவது வழக்கத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது. 

சில ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கும்போது 1000 வருடங்களுக்கு முன்னர் தான் முத்தமிடுவது பரவலாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் 3, 500 வருடங்களுக்கு முன்பு முத்தமிடும் பழக்கம் இருந்ததாக சில ஆவணங்கள் கூறுகின்றன. முத்தங்களை குறித்த தகவல்கள் பழங்கால இலக்கியங்கள், நூல்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில தகவல்களின்படி, முத்தம் இந்தியாவில் இருந்து பரவியதாக கருதப்படுகிறது. மெசபடோமியா நாகரீகத்தில் முத்தம் கொடுக்கும் வழக்கம் இருந்தது என கோபன்ஹேகன் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆய்வுகளின் முடிவுகள் நமக்கு தெரிவிக்கின்றன.  

முத்தங்கள் இந்தியாவில் இருந்து உலகமெங்கும் பரவியதற்கு சான்றான கட்டுரை "ஜர்னல் சயின்ஸ்" என்ற இதழில் வந்துள்ளது. இந்த ஆய்வின் கருப்பொருளை நிறுவ மெசபடோமியன் சொசைட்டியின் தொடக்க கால ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 4,500 வருடங்களுக்கு முன் மத்திய கிழக்கில் பொது இடங்களில் கூட முத்தமிடுவது இயல்பாக இருந்துள்ளது. முத்தம் வெளிப்படைத்தன்மையுடன் இருந்திருக்கிறது. 

அது மட்டுமின்றி ஆப்பிரிக்கா, மங்கோலியர்கள், மலாய்க்காரர்கள், வடகிழக்கில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியிலும் ஒரே மாதிரியான பழக்கவழக்கங்கள் காணப்படுகின்றன. கிரீஸ் நாட்டில் முத்தம் ஒரு சின்னமாக பயன்பாட்டில் இருந்துள்ளது. ரோமானியப் பேரரசில், சம அந்தஸ்தில் இருப்பவர்கள் மட்டும் தான் ஒருவரையொருவர் முத்தமிட முடியும். விவிலியத்திலும், புனித பவுல் பரிசுத்தமான முத்தத்துடன் ஒருவரையொருவர் வாழ்த்துங்கள் எனக் கூறியுள்ளார். இது கைகளிலும் கன்னங்களிலும் கொடுக்கும் முத்தம். 

மெசபடோமியா நாகரீகம், யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிகளுக்கு மத்தியில் இருந்த இடத்தில் தான் வளர்ந்தது. இதுவே மனிதர்களின் கலாச்சாரத் தொடக்க புள்ளி என்று நம்பப்படுகிறது தற்போதைய ஈராக், சிரியா ஆகிய பகுதிகள்தான் மெசபடோமியா நாகரீகம் தழைத்த பகுதிகளாகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முத்தம் கொடுக்கும் பழக்கம் இருந்தது குறித்தும், மக்கள் எப்படி முத்தம் கொடுத்தார்கள் என்பது குறித்தும் களிமண் பட்டைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் இங்கு தான் கிடைத்துள்ளன.  

ஆராய்ச்சியாளர் டாக்டர் ட்ரோல்ஸ் கூறும்போது, "மெசபடோமியாவில் முத்தமிடும் பழக்கம் குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கத்தையும், அன்பையும் வெளிப்படுத்தும் வழிமுறையாக இருந்திருக்கலாம்"என ஆவணங்கள் வெளிப்படுத்துவதாக கூறினார். 

வேதங்களின் அடிப்படையான பாரம்பரியத்தில், அப்பா பிறந்த குழந்தையின் தலையில் 3 முறை முத்தம் கொடுப்பார். ஆனாலும் பழங்கால இந்தியாவில் இது முத்தம் என்ற பெயரில் அழைக்கப்படுவதில்லை. இதற்கு வாசனை என்ற பெயர் வைத்துள்ளார்கள். பிற்காலத்தில் அதுவே முத்தம் என்று அறியப்பட்டது. வேத நூல்களின் அடிப்படையில் வாசனை என்ற சொல்லை உதடுகளால் தொடுவது என்ற அர்த்தத்திலும் எடுத்து கொள்ளலாம். அங்கு அந்த வார்த்தை அப்படிதான் கையாளப்பட்டது. 

ரிக்வேதத்தில் ஸ்பர்ஷ் என்பதன் பொருள் உதடுகளால் தொடுதல். முத்தம் குறித்த சான்றுகள் மகாபாரதம் போன்ற புனித நூல்களிலும், அந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட மற்ற கதைகளிலும் பார்க்கப்படுகிறது. உலகமே வியந்த அலெக்சாண்டர் மன்னர் இந்தியா வந்தபோது தான் முத்தமிடுவதை கண்டு வியந்துள்ளார். ​இங்கு அவர் முத்தத்தை கற்று கொண்டது போல, அவருடைய ராணுவத்தினரும் முத்தமிடும் பழக்கத்தை கற்றுகொண்டர். இவர்கள் பிற நாடுகளில் முத்தமிடும் பழக்கத்தை பரப்பியதாக கருதப்படுகிறது. இப்படி பார்க்கும்போது முத்தம் இந்தியாவில் தான் உருவானதாக சொல்லப்படுகிறது. 

இந்தியாவில் எழுதப்பட்ட காமசூத்திர நூலில் கூட முத்தம் குறித்த குறிப்புகள் உள்ளன. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் காதல் காம உறவில் முத்தத்தின் முக்கியத்துவத்தை விரிவாக குறிப்பிடுகிறது. ஒருவர் முதல் முறையாக முத்தம் கொடுக்கும் போது எப்படி செய்வது சரியாக இருக்கும் என்பது போன்ற விளக்கங்கள் காமசூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

 போனோபோஸ் குரங்குகள் தங்கள் காதலை வெளிப்படுத்த பாலியல் இச்சையுடன் முத்தமிடுமிடுமாம். சிம்பன்சி குரங்குகள்  இணக்கமான உறவை ஏற்படுத்த முத்தம் கொடுத்து கொள்வதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த இரண்டு இனமும் மனிதர்களுக்கு பரிணாம அடிப்படையில் தொடர்பு கொண்டவை. இது மனிதனின் நடத்தை முத்தம் போன்றவைகளை புரிந்து கொள்ள ஒரு காரணியாக இருக்கிறது. 

click me!