குண்டா இருப்பதால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்குதா? உங்க பாட்னர் கூட இந்த 4 விஷயங்களை ட்ரை பண்ணுங்க!

First Published | May 22, 2023, 6:13 PM IST

அதிக எடையுள்ள தம்பதிகள் உடலுறவு கொள்ளும்போது கடினமாக இருந்தால், அவர்கள் முயற்சி செய்து பார்க்க சில செக்ஸ் பொசிஷன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன....

உடல் பருமன் அதிகமுள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் படுக்கையறையில் தங்கள் துணையுடன் கொஞ்சம் சிரமப்பட வேண்டியுள்ளது. பாலுறவில் உள்ள வெவ்வேறு நிலைகள் குறித்த சரியான புரிதல் இருந்தால் அப்படி சிரமப்பட தேவையில்லை. உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்ற செக்ஸ் பொசிஷன்களை இங்கு காணலாம். 

உடல் எடையை மொத்தமாக உங்கள் துணை மீது போட்டு அவர்களை சிரமப்படுத்த வேண்டாம். முன்விளையாட்டுகளின் போது கொஞ்சம் குறுக்கே படுத்து கொள்ளுங்கள். இதனால் அவர்கள் ஆசுவாசமாக இருக்க முடியும். பின்னால் படுக்கையில் பின்னால் இருந்து உறவு கொள்வதும் ஒருவகையில் புதிய அனுபவமாக இருக்கும். 

அமர்ந்த நிலை

செக்ஸ் வைக்கும்போது அமர்ந்த நிலையில் தலையணைகள், மெத்தைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்த நிலையில் ஆண் நாற்காலியில் அமர்ந்திருக்கிறான். பெண் அவரைச் சுற்றி கால்களை அடைய முடியாவிட்டால், அவள் திரும்பி அவனது மடியில் உட்காரலாம். 


டாக்கி ஸ்டைல் (doggy style)

உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு படுக்கையறையில் டாக்கி ஸ்டைல் (doggy style) பாலின நிலை சிறந்தது. உறவு கொள்ள தொடங்கிய சிறிது நேரம் கழித்து சோர்வடையலாம். ஆனால் ஓரிரு தலையணைகள் அந்த ஆதரவை வழங்கும். அந்த நிலையை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளலாம். 

sex

தலைகீழான கௌவ்கேர்ள் பொசிஷன்

கௌவ்கேர்ள் பொசிஷன் அதிக எடை கொண்டவர்களுக்கானது அல்ல. ஆனால் தலைகீழ் நிலையில் செய்வது சரியானது. தலைகீழான கௌவ்கேர்ள் பொசிஷன் (inverted cow girl position) குண்டான உடல்வாகு கொண்டவர்களுக்கு வசதியாக இருக்கும். கீழே ஆண் படுத்து கொண்டும், அவர் மீது அமர்ந்த நிலையில் பெண் உறவு கொள்வதே தலைகீழான கௌவ்கேர்ள் பொசிஷன். 

இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கையில் இதை அனுபவிச்சிருக்கீங்களா?

பட்டாம்பூச்சி நிலை 

இந்த பாலியல் நிலையில், பெரிய தொப்பை உள்ளவர்களும் வசதியாக உறவு கொள்ளலாம். பட்டாம்பூச்சி பொசிஷனில் ஆண்கள் நின்ற படி இருக்க வேண்டும். பெண் படுக்கையின் விளிம்பில் கால்களை கிளர்த்திய நிலையில் உயரே தூக்கி கொள்ள வேண்டும். 

ஸ்பூனிங் நிலை 

இந்த வகை மற்ற வகைகளை போன்றது அல்ல. முதுகு, தோள்கள், இடுப்பில் அதிக அழுத்தம் கொடுக்காததால், ஸ்பூனிங் பொசிஷன் சிறந்தது. இந்த அம்சம் அதிக எடை அல்லது பருமனான தம்பதிகளுக்கு உகந்ததாகவும், திருப்திகரமாகவும் இருக்கும். 

இதையும் படிங்க: ஆண்கள் ரொம்ப நல்லவங்களா இருந்தாலுமே.. இந்த 3 காரணத்துக்காக அவங்க துணை பிரிய வாய்ப்பு இருக்கு!

Latest Videos

click me!