இரவில் நிர்வாணமாக தூங்க விரும்பும் கணவர்.. சங்கடப்படும் மனைவி! அட்ஜஸ்ட் செய்யனுமா? நிபுணர் பதில்..

First Published | May 19, 2023, 8:37 PM IST

கணவன் மனைவிக்குள் சரியான புரிதல் இல்லாமல் போனால் அந்த உறவில் விரிசல் பெரிதாகி கொண்டே இருக்கும். 

வாசகியின் கேள்வி:"எங்களுடையது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். நாளடைவில் நாங்கள் ஒருவரையொருவர் ஆழமாக காதலித்தோம். ஆனால் ஒரு பிரச்சினை மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அது தவிர குறை என்று கூற எதுவும் இல்லை. என் கணவர் எப்போதும் நிர்வாணமாக தூங்க விரும்புகிறார். அது எனக்கு வித்தியாசமாக இருக்கிறது. காலையில் வீட்டுக்கு வேலைக்காரி வரும்போது சங்கடமாக இருக்கிறது. 

ஒருமுறை எங்கள் வீட்டு வேலைக்காரப் பெண் அறைக்குள் போக மறுத்தார். அதற்கு காரணமே என் கணவர் தான். இதை என் கணவரிடம் பலமுறை விளக்க முயற்சித்தேன். ஆனால் அவர் ஆடைகளுடன் தூங்க முடியாது என அழுத்தமாக கூறிவிட்டார். இப்போது என்ன செய்ய வேண்டும்?"என வேதனையுடன் தெரிவித்தார். 


நிபுணரின் பதில்:" நிர்வாணமாக தூங்குவது உண்மையில் நல்ல விஷயம். இதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் உங்கள் வீட்டுக்கு வரும் வேலைக்கார பெண்ணுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் இருப்பதாக தெரிகிறது. இதில் மனைவியாகிய நீங்கள் மட்டுமில்லாமல் மூன்றாம் நபரான வேலைக்கார பெண்ணும் தொந்தரவுக்குள்ளாகிறார். ஏதேனும் தவறாக நடக்கும்பட்சத்தில் உங்கள் கணவர் மீது பணிப்பெண் தவறான நடத்தை அடிப்படையில் புகார் அளிக்க வாய்ப்புள்ளது. உங்களுடைய கணவருக்கு ஏதேனும் தோல் பிரச்சினைகள் அல்லது நிர்வாணமாக தூங்குவதை அவர் இயல்பிலே விரும்புவதாக இருந்தால் அவர் தன் அறையை உள்பக்கமாக தாளிட்டு தூங்க அறிவுறுத்துங்கள். 

இதையும் படிங்க: ஆண்கள் உறவில் ஈடுபடும் போது குதிரை வேகத்தில் செயல்பட டக்கரான டிப்ஸ்!!...

வேலைக்கார பெண் வருவதற்கு முன்பாக வேறு அறையில் சென்று தூங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த அறையை சுத்தம் செய்து கொள்ளலாம். இந்த விஷயத்தில் உங்கள் கணவருடைய வசதியை மட்டும் யோசிக்காமல் புறச்சுழல்களையும் அறிந்து செயல்படுவதே சரியாக இருக்கும். உங்கள் கணவரிடம் முடிந்தவரை இது குறித்து கறாராக பேசி முடிவெடுங்கள். 

இதையும் படிங்க: என் மனைவி லெஸ்பியனா இருப்பாரா? அந்த நேரத்தில் மட்டும்.. குழம்பும் வாசகருக்கு நிபுணரின் தெளிவான பதில்..!

Latest Videos

click me!