வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க, நீங்கள் தினமும் பல் துலக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொரு நாளும் உங்கள் உள்ளாடைகளை மாற்றுவது சமமாக முக்கியமானது. உள்ளாடைகளை மாற்றவில்லை என்றால், பல ஆபத்தான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். இரண்டு நாட்கள் தொடர்ந்து ஒரே உள்ளாடைகளை அணிவது ஆபத்தானது என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், சிலருக்கு மழைக்காலம், குளிர்காலங்களில் தினமும் குளிப்பது பிடிக்காது. ஏனெனில் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால். ஆனால் நீங்கள் தினமும் குளிக்காவிட்டாலும், உங்களது உள்ளாடைகளை கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.