
Scientific Reasons Why Sweating Is Good For You : வியர்வை என்பது நம்முடைய உடலில் நடக்கும் மிகப் பொதுவான, அதேசமயம் நம் அனைவரும் வெறுக்கும் ஒரு விஷயமாகும். அதுவும் குறிப்பாக கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் அதிகமாக வியர்க்கும். இதனால் உடலில் நீரிழிப்பு பிரச்சினை தான் ஏற்படும். கூடுதலாக, வியர்வை உடல் துர்நாற்றத்தையும் ஏற்படுத்திவிடும்.
வியர்வை வருவது ஏன்?
உடற்பயிற்சி, காய்ச்சல், புகையிலை, பதட்டம், வெப்பம் உள்ளிட்ட பல காரணங்களால் வியர்வை வரும். வியர்வையானது பதட்டம், நீரிழிப்பு, அல்லது நம்முடைய உடலில் ஏதேனும் ஒரு நோயுடன் போராடுகிறது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். இத்தகைய சூழ்நிலையில், ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாகவே வியருக்கும். உண்மையில், அதிகப்படியான வியர்வையால் உடலுக்கு ஒரு சில நன்மைகளும் கிடைக்கும் தெரியுமா? அவை என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உடல் வெப்பநிலை கட்டுப்படுத்தப்படும்:
வியர்வையின் முதல் வேலை என்னவென்றால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது தான். உண்மையில், வியர்வையானது வியர்வை சுரப்பிகளால் தோலில் இருந்து சுரக்கப்படுகிறது. பிறகு அது ஆவியாகிய உடலின் வெப்பநிலையை குறைக்கின்றது. ஒருவேளை நீங்கள் வெப்பமான சூழலில் வசிக்கிறீர்கள் என்றால், உடலிலிருந்து வெளியேறும் வியர்வையை ஈடு செய்ய நிறைய தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்.
சருமத்தை பொலிவாக்கும்:
உடற்பயிற்சி உங்களது உடலில் இருந்து ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும். இதனால் சருமம் பிரகாசிக்கும். அதாவது உங்களது சருமத்தின் உள்ளே இருந்து பிரகாசத்தை அளிக்கிறது. அதிகப்படியான வியர்வை உங்களது சருமத்தை பளபளப்பாக்கும். மேலும் ஆரோக்கியமான ரத்த ஓட்டம் சருமத்தின் செல்களுக்கு ஊட்டமளிக்கும். கூடுதலாக சருமத்தின் செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கும் இதனால் சருமம் பொலிவாகும்..
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்.. வியர்வை வெளியில் தெரியாமல் இருக்க 'இந்த' கலர்ல டிரஸ் போடுங்க!
இதயத்திற்கு நல்லது:
நீங்கள் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும்போது உங்களுக்கு அதிகமாக வியக்க ஆரம்பித்தால், அது குறித்து கவலைப்பட வேண்டாம். அது இதயத்திற்கு நல்லது தான். ஏனெனில் ஒருவரின் கடினமான உழைப்பு மற்றும் சரியான உடற்பயிற்சி செய்தால் மட்டுமே அதிகப்படியான வியர்வை வெளியேறுகிறது என்று தரவுகள் உள்ளது. ஆனாலும் எப்போது, எவ்வளவு வியர்க்கிறது என்பதில் நிறைய வேறுபாடுகள் உள்ளதால் அதில் கவனமாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: உங்கள் உள்ளங்கை அடிக்கடி வியர்க்குதா..? ஜாக்கிரதை... இது ஒரு கொடிய நோயின் அறிகுறி!
உடலை சுத்தமாக்கும்:
உடலை சுத்தமாக்குவது வியர்வை முக்கிய பங்கு வகிக்கிறது. உண்மையில் வியர்வை தான் நம் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால், ஆல்கஹால், உப்பு ஆகியவற்றை அகற்ற பெரிதும் உதவுகிறது. இன்னும் சொல்லப்போனால், நச்சுக்களை வெளியேற்றுவதற்காக வியர்வை தான் உடலின் வழிமுறையாக செயல்படுகின்றது. மேலும் வியர்வை தான் முகப்பருக்கள், துளைகள் மற்றும் பிற சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்புகள் குறையும்:
அதிகமாக வியக்கும் போது உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு வியர்வை மூலமாக வெளியேற்றப்படுகிறது. மேலும் இது எலும்புகளின் கால்சியத்தை சரியான அளவில் வைக்க உதவுகிறது. முக்கியமாக வியர்வை தான் சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு காரணமாக இருக்கும் உப்பு மற்றும் கால்சியம் அதிகரிப்பதை தடுக்கின்றது