எடை குறைப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று நிறைய டயட்டீஷியன்கள் சொல்லுகின்றனர் இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? தண்ணீர் உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது உங்கள் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் இது கூடுதல் கிலோவை குறைக்க உதவுகிறது. உங்கள் தண்ணீரில் சரியான பொருட்களைச் சேர்ப்பது அந்த கூடுதல் கிலோவை விரைவாகக் குறைக்க உதவும். இப்பதிவில் நாம் உடல் எடையை குறைப்பதற்காக ஏலக்காய் தண்ணீர் எவ்வாறு உதவுகிறது என்பதை காணலாம்.
ஏலக்காயின் சில ஆரோக்கிய நன்மைகள்:
ஏலக்காய் போன்ற பொதுவான சமையலறைப் பொருள் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது பலருக்குத் தெரியாது. ஏலக்காயில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை உள்ளது. உங்கள் உடலில் உள்ள கொழுப்பை எரிப்பதைத் தவிர, ஏலக்காய் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
ஏலக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன மற்றும் இது உங்கள் இரத்த அழுத்த அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. ஏலக்காயில் உதவக்கூடிய கலவைகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது என்று ஆய்வு ஒன்று கூறுகின்றது.
ஏலக்காய் தண்ணீர் செய்வது எப்படி?
முதலில் 5 முதல் 6 ஏலக்காயை எடுத்து தோல் நீக்கி இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். பின் காலை எழுந்தவுடன் தண்ணீரை சூடாக்கவும். இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை குடித்து வந்தால் உடல் எடை குறையும். இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு சுமார் 1 லிட்டர் அளவு குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து 14 நாட்கள் செய்து வந்தால் உடல் எடை குறையும்.
ஏலக்காய் தண்ணீர் ஏன்?
இந்த நீரை தினமும் குடித்து வந்தால் உங்களின் உடல் எடை குறையும். இது அதிகப்படியான உணவு அல்லது ஆரோக்கியமற்ற எதையும் சாப்பிடுவதைத் தடுக்கும். இந்த தண்ணீரை குடிப்பது உங்கள் சருமத்திற்கும் சிறந்தது. இது உங்கள் சருமத்தை பளபளப்பாக்கும்.