செக்ஸ் வைத்த பிறகு ஆண்கள் மறந்தும் இந்த ஒரு தவறை பண்ணாதீங்க!! உங்க மனைவி உடலுறவையே வெறுத்துடுவாங்க!!

First Published | Jun 3, 2023, 3:43 PM IST

உடலுறவு வைத்துக் கொண்ட பிறகு ஆண்கள் தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு காணலாம். 

தாம்பத்தியம் வைக்கும்போது ஆண்கள் சோர்ந்து போய் உடனடியாக தூங்குகிறார்கள். பெண்கள் அவ்வாறு தூங்குவதில்லை. தங்களுடைய துணை தூங்குவதையும் பெண்கள் விரும்புவதில்லை. உடலுறவுக்கு பின் ஆண்கள் தூங்குவதை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய துணை நெருங்க வாய்ப்பாக அமையும். உடலுறவுக்கு பின்பு ஆண்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் குறித்து இங்கு காணலாம். 

உடலை கழுவுதல்!! 

உடலுறவு வைத்துக் கொண்ட பிறகு தம்பதிகள் தங்களை சுத்தப்படுத்திக் கொண்டுதான் உறங்கச் செல்ல வேண்டும். இப்படி சுத்தப்படுத்தும்போது ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். நீங்கள் குளிக்க விரும்பினால் இணைந்து குளிப்பது உங்களுக்கு இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும். இந்த சமயங்களில் நீங்கள் மீண்டும் புணர்வதற்கான சூழல்கள் கூட உருவாகலாம். இதனால் உங்களுடைய அன்யோன்யம் அதிகரிக்கும். 

Tap to resize

பாராட்டு 

உடலுறவுக்கு பின்னர் உங்கள் துணையை பாராட்ட மறக்காதீர்கள். அவருடன் உங்களுக்கு கிடைத்த சுக அனுபவத்திற்கு முத்தங்களால் நன்றி சொல்லுங்கள். உங்கள் மனைவி எவ்வளவு சிறந்தவர் என்பதை இதமாக பகிர்ந்து கொள்ளுங்கள். உடலுறவு வைத்துக் கொண்ட பிறகு உங்களுடைய மனைவியிடம் அந்த அனுபவத்தை குறித்து உரையாடுங்கள். உங்களுடைய மனைவி இது மாதிரியான விஷயங்களை பேசக் கூச்சப்பட்டு தவிர்த்தால் அவரை கட்டாயப்படுத்த வேண்டாம். மற்றபடி, உறவு அவருக்கு எந்த அளவுக்கு பிடித்திருந்தது, அவருடைய எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து கேட்டறியுங்கள். மனைவியை கணவன் திருப்திப்படுத்தும் போது அந்த உறவில் பிரிவு என்பதே இல்லை. 

இசை கேட்டல்!! 

தங்களுடைய படுக்கை அறையில் பெரும்பாலான தம்பதிகள் ரொமான்டிக்காக நடந்து கொள்வதே இல்லை. ஒருவரையொருவர் செல்லமாக சீண்டுவதும், ஆசையாக பேசுவதும் உறவில் நெருக்கத்தை அதிகரிக்கும். படுக்கையறையில் கணவனும் மனைவியும் இணைந்து பாடல்கள் கேட்பது உங்களுடைய மனதையும் அந்த சூழலையும் ரம்யமாக மாற்றும்.  

மசாஜ் செய்யுங்கள்!! 

உடலுறவு முடிந்ததும் உங்களுடைய துணையை வசதியாக உணர செய்யுங்கள். அவர்களுக்கு மசாஜ் செய்து உடலின் வலியை குறைக்க உதவுவது உங்களுக்கிடையான நெருக்கத்தை அதிகரிக்கும். உடலுறவு முடிந்ததும் புரண்டு வேறொரு திசையில் படுத்துக்கொள்ளாமல் உங்களுடைய துணைக்கு ஆடைகளை போர்த்தி விடுங்கள். உடலுறவு முடிந்ததும் ஆண்கள் செய்யவே கூடாது விஷயம் என்றால் அது உடனே தூங்கி விடுவது தான். அதை பெண்கள் விரும்புவதில்லை. மற்றபடி மேலே சொன்ன விஷயங்களை உடலுறவு முடிந்ததற்கு பின்னர் ஆண்கள் செய்யும்போது அந்த உறவு வலுவாகும். 

Latest Videos

click me!