Imposter Syndrome : சச்சின் டெண்டுல்கரையும் விட்டு வைக்காத 'இம்போஸ்டர் சிண்ட்ரோம்' மீண்டு வருவது எப்படி?

Published : Jul 02, 2025, 01:17 PM IST

ஒருவருக்கு திறமையானவர் என்கிற அங்கீகாரம் கிடைத்தாலும், அவர்கள் தங்கள் திறமை மீது சந்தேகம் கொள்ளும் ஒருவித உளவியல் நிலையை ‘இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ என்கிறோம். இதை சச்சின் டெண்டுல்கர் கூட தன் வாழ்வில் அனுபவித்திருக்கிறார்.

PREV
16
What is Imposter Syndrome?

‘இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ என்பது ஒரு உளவியல் நிலையாகும். இந்த உளவியல் நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய சாதனைகள், திறமைகள் மற்றும் திறன்களில் சந்தேகம் கொள்கின்றனர். அவர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் தங்களின் வெற்றிகள் தற்செயலாக ஏற்பட்டது அல்லது அதிர்ஷ்டத்தால் கிடைத்தவை என நம்பிக்கை கொள்கின்றனர். தங்களுக்கு உண்மையான திறமை இல்லை என்றும், தங்களின் போலித்தனமும் ஒரு நாள் வெளியில் தெரிந்து விடும் என்று பயம் கொள்கின்றனர். இந்த உளவியல் ரீதியான பிரச்சனையே ‘இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ என அழைக்கப்படுகிறது.

26
‘இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ அறிகுறிகள் என்ன?

ஒரு நபர் தான் திறமையாக இருக்கும் போதிலும், பல சாதனைகள் புரிந்திருப்பினும், அதை இந்த உலகமே கொண்டாடினாலும், அந்த நபரால் அந்த வெற்றியை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இருக்கும். தனக்கு உண்மையான திறமை இல்லை, இந்த இடத்திற்கு நான் தகுதியானவர் இல்லை என்று நினைப்பது, தனது வெற்றிகள் தற்செயலாக, மற்றவர் உதவியால் அல்லது அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என நம்புவது, ஒருநாள் தன்னுடைய போலித்தனம் அனைவருக்கும் தெரிந்து விடும் என்கிற பயம், தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் மற்றவர்களை விட அதிகமாக உழைக்க வேண்டும் என்கிற எண்ணம், பாராட்டுகளை பெறும் பொழுது அதை சங்கடமாக உணர்வது அல்லது மறுப்பது ஆகியவை ‘இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ ஆல் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகள் ஆகும்.

36
யாருக்கு ‘இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ பிரச்சனை ஏற்படுகிறது?

இந்த நிலை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிறுவயதில் அதிகமாக பாராட்டப்படாதவர்கள் அல்லது தொடர்ந்து பிறரிடம் இருந்து திட்டு வாங்கியவர்கள், இம்போஸ்டர் சிண்ட்ரோம்க்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம். ஆண்களை விட பெண்கள் இந்த நிலைக்கு ஆளாகின்றனர். சமூகத்தில் பெண்கள் தொடர்பான பாலின பாகுபாடுகள் இம்போஸ்டர் சிண்ட்ரோமை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணியாக அமைகிறது. சில கலாச்சாரங்களில் தன்னை குறைத்து மதிப்பிடுவது அல்லது அதிக பணிவு காட்டுவது நேர்மையான குணங்களாக கருதப்படுவது இம்போஸ்டர் சிண்ட்ரோம்க்கு வழிவகுக்கும். போட்டி நிறைந்த தொழில் சூழலில் தன்னை பிறருடன் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது ‘இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ ஏற்படலாம். தனக்குத்தானே மிக உயர்ந்த எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு அதை அடைய முடியாமல் போகும் பொழுது இந்த நிலை உருவாகலாம்.

46
‘இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ பிச்சனையின் ஐந்து வகைகள்

இம்போஸ்டர் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் ஐந்து வகைகளாக பிரிக்கின்றனர். எந்த காரியத்தையும் குறைபாடு இல்லாமல் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் சிறு தவறுகள் ஏற்பட்டாலும் தங்களை திறமையற்றவர்களாக கருதுகின்றனர். ஒரு துறையில் அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்து கற்றுக் கொள்ள முடியாவிட்டால் தங்களை நிபுணர் இல்லை என்று குறைத்து மதிப்பிடுகின்றனர். ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள கூடுதல் முயற்சி தேவைப்பட்டால் தங்களால் இயலாது என்று எண்ணுகின்றனர். மற்றவர்களின் உதவி இல்லாமல் தானே தனியாக செய்ய வேண்டும் என்று நினைத்து உதவி கேட்டு பெறப்படும் வெற்றிகள் தங்களுக்கு உரியது அல்ல என்று நினைப்பவர்கள், பல பணிகளை ஒரே நேரத்தில் கையாண்டு அதை சிறப்பாக செய்ய முடியவில்லை என்று வருந்துபவர்கள் என ‘இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ ஆல் பாதிக்கப்பட்டவர்கள் பிரிக்கப்படுகின்றனர்.

56
‘இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ பிரச்சனையில் இருந்து மீண்டு வருவது எப்படி?

இதை கையாள்வதற்கு எளிய வழிமுறைகள் உள்ளன. கடின உழைப்பு மற்றும் திறமையால் கிடைத்த வெற்றிகளை ஏற்றுக்கொண்டு அதை நீங்கள் முதலில் அங்கீகரிக்க வேண்டும். நீங்கள் பெற்ற வெற்றிகளை நெருங்கிய நண்பர்கள், குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். தவறு செய்துவிட்டால் அதிலிருந்து கற்றுக் கொண்டு முன்னேறுவது மனித இயல்பு என்பதை உணர வேண்டும். தன்னைப் பற்றிய கடுமையான சுய விமர்சனங்களை நிறுத்திக் கொண்டு தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும். நீங்கள் உங்கள் மீது எழுப்பும் சந்தேகம் சரியானதுதானா என்பதை பிறருடன் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். சமூக வலைதளங்கள் அல்லது பிறருடன் உங்களை ஒப்பிடுவதை விடுத்து உங்கள் தனித்துவத்தை உணர்ந்து முன்னேற வேண்டும். இம்போஸ்டர் சிண்ட்ரோம் ஆல் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பெரிதும் பாதித்தால் மனநல ஆலோசனையை மேற்கொள்ள வேண்டும். இது உங்களை எளிதில் வெளிக்கொண்டுவரவும், சரியான வழிகாட்டலுக்கும் உதவும்.

66
சச்சின் டெண்டுல்கருக்கு ஏற்பட்ட பாதிப்பு

சச்சின் டெண்டுல்கர் முதல்முறையாக மைதானத்திற்கு சென்ற போது 15 ரன்களில் அவுட் ஆகி ஃபெவிலியன் திரும்பினார். அப்போது கண்ணாடியை பார்த்து, “இது உனக்கான வேலை இல்லை இதற்கு நீ தகுதியானவன் இல்லை” எனக் கூறி அழுதுள்ளார். ஆனால் இந்த பிரச்சனையை அவர் கடந்து இன்று சாதனையாளராக விளங்கி வருகிறார். நாம் மட்டுமல்ல பல திறமையானவர்களும் இந்த இம்போஸ்டர் சிண்ட்ரோமை அனுபவித்து இருக்கிறார்கள். உங்கள் திறமைகளை ஏற்றுக்கொண்டு உங்களை நீங்கள் கொண்டாடத் தொடங்கும் பொழுது இந்த பிரச்சனையில் இருந்து நீங்கள் எளிதில் வெளிவந்து விடலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories