நீரிழிவு நோயை எப்படி தடுக்க?
- அமர்ந்த நிலையில் வேலை செய்வது உடல் செயல்பாட்டை முடக்கிவைக்கிறது. இதனால் உடல் எடை அதிகமாகும். இதுவும் நீரிழிவு நோய்க்கு காரணமாகிறது. அதனால் ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கும் எழுந்து நடப்பது நல்லது.
- பசி அடங்கிய பிறகு அதிகமாக உண்பதை தவிர்க்க வேண்டும். இரவில் 7 முதல் 8 மணிக்குள்ளாக சாப்பிடுவது நல்லது. காலை உணளை மூளை உணவு என்பார்கள். அதை தவிர்க்கக் கூடாது.
- இரவில் நன்றாக தூங்க வேண்டும். இரவில் விழித்தால் இரத்த சர்க்கரை அளவு உயரும்.
- மன அழுத்தமும் கூட சர்க்கரை நோய்க்கு காரணம். அதனால் மனஅழுத்தத்தை குறைக்கும் யோகா, தியானம், உடற்பயிற்சி ஆகியவைகளை செய்யலாம்.
- உணவுக்கு பின் 10 நிமிடங்கள் நடப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.