இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நம்முடைய உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதியவர்களுக்கு தான் மூட்டு வலி வரும் என சொல்வார்கள். ஆனால் இப்போது இளம்தலைமுறையினருக்கு கூட அந்த பிரச்சனை இருக்கிறது.
இது மாதிரியான மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கை, கால் வலி ஆகியவற்றிற்கு நம் உடலில் சத்துக்கள் போதுமான அளவில் இல்லாமல் இருப்பதும் காரணமாக மருத்துவர்களால் சொல்லப்படுகிறது. கால்சியம் குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, சில வைட்டமின்களின் (வைட்டமின் டி3) பற்றாக்குறை நமக்கு உடலில் பலவீனத்தை ஏற்படுத்துகிறது. அதனால் முறையான ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
உடல் எடை அதிகமானால் மூட்டு தேய்மானம் அடையும். அதனால் மூட்டு வலி உண்டாகும்பட்சத்தில் எந்த மருந்து மாத்திரையும் உங்களுக்கு கை கொடுக்காது. ஏனென்றால் உடல் எடை அதிகமாகும் போது மூட்டுகள் தேயாமல் பாதுகாக்கும் மூட்டுறைப்பாய திரவம் குறைந்து கொண்டே செல்லும். இதனால் மூட்டுகள் விரைவில் தேய்மானம் அடையும். முறையான உணவு பழக்கம், உடற்பயிற்சியில் எடையை குறைப்பது தான் மூட்டு வலியில் விடுபட நல்ல தீர்வு. மூட்டுகளை பலப்படுத்தும் உணவுகளான கம்பு, ராகி, வரகு போன்ற கால்சியம் அதிகம் கொண்ட தானியங்களை அவ்வப்போது உண்ணுங்கள்.
மற்றொரு வீட்டு வைத்தியம் சொல்கிறார்கள். முயன்று பாருங்கள். கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி ஆகியவை நிறைந்து காணப்படும் வெந்தயத்தை மூட்டு வலி, கை, கால் வலி நீங்க பயன்படுத்துவார்கள். வெந்தயத்துடன் சீரகம், மிளகு ஆகியவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை வாணலியில் போட்டு வறுத்து ஆறவிட்டு பொடியாக அரைத்து எடுத்து சேமித்து வையுங்கள். இந்த பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து, அதை 200 மிலி தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதனை வெறும் வயிற்றில் காலை, மாலை ஆகிய இருவேளைகளில் குடிக்க வேண்டும். இதனால் எல்லா வலிகளும் குணமாகும் என்கிறார்கள். முயன்று பாருங்கள்.
இதையும் படிங்க: முள்ளங்கியை எப்படி சாப்பிடணும் தெரியுமா? இந்த மாதிரி 1 தடவை சாப்பிடுங்க..! கேஸ், செரிமான பிரச்சனையே வராது..