பலருடன் செக்ஸ் உறவு கொள்வது என்பது ஒரே நேரத்தில் அல்லது வெவ்வேறு காலகட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட துணைகளுடன் உறவு கொள்வதாகும். உங்களுக்கு ஏற்கனவே ஒரு துணை இருக்கும் போது மற்றவர்களுடன் உறவு கொள்வதையும் இது குறிக்கும். இந்த மாதிரி உறவு வைத்து கொள்வது என்ன விளைவுகளை தரும் என இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
அமெரிக்க செக்சுவல் ஹெல்த் அசோசியேஷனின் (america sexual health association) கருத்துப்படி, உறவு கொள்ளும் நபர்களுக்குள் சம்மதம் இருக்கும் வரை அதில் தொடர்புடைய ஆட்களுக்கு ஆபத்து இல்லை. பாலியல் இன்பத்தை அடைவதற்கு பல வழிகள் உள்ளன. அதில் நிறைய பேருடன் உறவு கொள்வதும் அடங்கும்.
ஒரு நபரின் வாழ்க்கையில் திருப்திகரமான உடலுறவு இல்லாமல் போனால் அது அவரை மட்டும் அல்லாமல் அவரை சார்ந்தவர்களுக்கும் வெவ்வேறு வழிகளில் பிரச்சினைகளை உண்டாக்கும். ஒரு தனிநபருக்கு தன்னுடைய சொந்த பாலியல் தேவைகள் குறித்த புரிதல் அவசியம். அதை போல தன் துணையின் பாலியல் தேவைகளையும் அறிதல் முக்கியமாகிறது.
ஒரு குறுகிய காலத்தில் பல நபர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு வைத்து கொள்வது பாலியல் நோய்களை உண்டாக்கும். எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் மாதிரியான பரவும் பாலியல் தொற்றுக்களுக்கு ஆளாக நேரிடும். முக்கியமாக மனித பாப்பிலோமோவைரஸ் பாதிப்பு (Human papillomavirus infection) உங்களுக்கு வரலாம். பலருடன் உறவு கொள்வோரை இந்த பாலியல் நோய் தாக்க வாய்ப்புள்ளது. இதற்கு அறிகுறிகள் வெளிப்படையாக தெரிவதில்லை. ஆனால் இந்த நோய் வந்தால் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயமும் வரும். அதனால் உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஆணுறைகளை பயன்படுத்துங்கள்.
Image: Getty Images
குறுகிய காலத்தில் உங்களைப் பற்றி நன்றாக உணரவும் அல்லது வேறு ஒருவரை மகிழ்ச்சியடையச் செய்யவும் நீங்கள் செக்ஸ் உறவு வைத்து கொண்டால் அது உங்களில் யாருக்கும் ஆரோக்கியமானதல்ல என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். உடலுறவு கொள்வது உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம். ஆனால் பல நபர்களுடன் உடலுறவு கொள்ளுதல் சிக்கலான விஷயம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு உடல் நலக் காரணிகளைத் தவிர வேறு காரணிகளையும் காரணமாக சொல்கின்றனர்.
Image: Getty Images
செக்ஸ் பொம்மைகளைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு முறை பயன்பாட்டிற்கும் முன்னும், பின்னும் அவற்றை நன்றாக கழுவி கொள்ளுங்கள். பலருடன் உறவு கொண்டால் தவறாமல் ஆணுறையைப் பயன்படுத்துவதை பழக்கமாக வையுங்கள். நீங்கள் தொடர்ந்து பரவும் பாலியல் தொற்று நோய் (STI)களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஒரு ஆய்வில் ஒரே ஒருதார மணம் கொண்ட நபர்களுக்கு பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றின் (STI) ஆபத்து ரொம்பவே குறைந்துள்ளது தெரிய வந்தது. ஆனால் பலருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகம் இருக்கிறது. எச்சரிக்கையாக இருங்கள்.
இதையும் படிங்க: செக்ஸ் உறவுக்கு முன்பு.. மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... அப்புறம் சங்கடம் தான்!!