விரைவில் கர்ப்பம் தரிக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

Published : Jul 26, 2023, 06:03 PM ISTUpdated : Jul 26, 2023, 06:07 PM IST

நீங்கள் விரைவில் கர்ப்பம் தரிக்க  என்னென்ன வழிகள் உள்ளது என்பதை குறித்து இங்கே பார்க்கலாம்.  

PREV
16
விரைவில் கர்ப்பம் தரிக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

ஒரு பெண் திருமணமான அடுத்த மாதமே அவளை சுற்றி இருப்போர் கேட்கும் ஒரே கேள்வி 'குழந்தை உண்டாகி இருக்கியா'. திருமணமான அடுத்த மாதமே சிலர் கர்ப்பமாகிவிடுகிறார்கள். ஆனால் கர்ப்பம் தரிக்காத சிலர் தன்னை சுற்றி இருப்பவர்கள் கேட்கும் கேள்வியால் மன உளைச்சல் மற்றும் விரக்தி அடைகின்றனர். எனவே, விரைவில் கர்ப்பமாக எளிய வழிமுறைகள் என்னை என்பதை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
 

26

விரைவில் கர்ப்பமடைய சில டிப்ஸ்:
ஊட்டசத்துகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் வைட்டமின் ஏ, டி, இ மற்றும் கே நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. ஏனேனில் இது கருவுருதலுக்கு அதிகம் வாய்ப்புள்ளது. குறிப்பாக இது பிறப்பு குறைபாட்டை போக்க உதவுகிறது. கருவுற ஆரோக்கியமான உணவு உட்கொள்வது அவசியம். எனவே, ஊசி போட்டு வளர்க்கும் எந்தவொரு இறச்சியையும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதுபோல், 
ரசாயணம் கலந்த கூல்ட்ரிங்ஸ் மற்றும் துரித உணவுகளையும் சாப்பிடக் கூடாது. இதனை பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது இருவரின் விந்துக்களையும் பாதிக்கும். ஆகையால் முடிந்தவரை ஆரோக்கியம் தரும் உணவுகளே உட்கொள்வது உடலுக்கு நல்லது. மேலும் பழங்கள், பச்சை காய்கறிகள், நாட்டுக்கோழி முட்டை, பயிர் வகைகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுகளை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

36

அதுபோல் பெண்கள் நல்ல உறக்கத்தை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில், நல்ல தூக்கம் மன அமைதியைத் தரும். சொல்லப்போனால், பல பிரச்சனைகளுக்கு காரணம் சரியான தூக்கம் இல்லாதது ஆகும். எனவே, நல்ல தூக்கம் நல்ல உடலுறவுக்கு வழிவகுக்கும்.

இதையும் படிங்க: pregnancy health tips : பெண்களே கர்ப்ப காலத்தில் இந்த விஷயங்களை ஒருபோதும் செய்யாதீங்க..!!

46

மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் புகையிலை போடுதல் போன்ற தவறான பழக்கங்களை கைவிட வேண்டும். ஏனெனில் இவை உடல் பாகங்களை எப்படி பாதிக்கிறதோ அதே போலவே தான் கர்ப்பபையையும் பாதிக்கிறது. இதனால் கரு உண்டாவது கடினம். சில சமயங்களில் இந்த கெட்ட பழக்கத்தால், நீங்கள் குழந்தை உண்டாவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடலாம்.

56

கர்ப்பம் தரிக்க உடற்பயிற்சி அவசியம். ஏனெனில் உடற்பயிற்சி செய்யும் போது கருமுட்டை நன்கு உறுதியாகும். மேலும் இது விரைவான கருவுறுதலுக்கு வழிவகுக்கும். அதுபோல் பெண்கள் கடுமையான உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு உடல் எடை அதிகமாக இருந்தால் கர்ப்பம் தரிக்க நாட்கள் ஆகும். மேலும் இது மாதவிடாய் சூழற்ச்சியையும் கெடுக்கும். எனவே, உடலும் மனதும் ஆரோக்கியமாக இருந்தால் தான் சுமக்கப் போகும் கருவினை பாதுகாக்க முடியும்.

இதையும் படிங்க: Postpartum Back Pain : பிரசவத்திற்கு பின் முதுகு வலி? உங்களுக்கான வீட்டு வைத்தியம் இதோ..!!

66

கர்ப்பம் தரிக்க முதலில் தம்பதிகள் சரியான நேரத்தில் உடலுறவு செய்ய வேண்டும். எனவே, நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம். அப்படி செய்தால் ஆரோக்கியமான விந்தணுக்கள் கருமுட்டையுடன் சேரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக விந்தணுக்கள் கருமுட்டையுடன் இணையும் வரை  நீங்கள் இந்த முயற்சி செய்ய வேண்டும். அதுபோல் பெண்களின் மாதவிடாய் முடிந்த பின் அடுத்து வரும் ஒன்று அல்லது இரண்டு வாரம் கழித்து உடலுறவு வைத்து கொள்ள வேண்டும். ஏனெனில், கருப்பையில் உள்ள கருமுட்டைகள் முதிர்சி அடைந்து வெளியே தள்ளப்படும். குறிப்பாக இந்நாளில் தான் விந்தணுக்கள் கருமுட்டையுடன் இணைய வாய்புகள் அதிகமாக இருக்கும். எனவே தொடர்ந்து உடலுறவு வைத்து கொள்வது அவசியம்.

Read more Photos on
click me!

Recommended Stories