வீடே அதிரும் குறட்டையில் இருந்து விடுபடனுமா? இப்படி 'டீ' போட்டு குடிச்சாலே போதும்

First Published | Jan 19, 2023, 10:36 AM IST

இரவில் நிம்மதியாக தூங்க விடாமல் மற்றவர்களையும் தொந்தரவுக்குள்ளாக்கும் குறட்டை பிரச்சனைக்கு எளிய தீர்வுகளை இங்கு காணலாம். 

இரவு தூக்கத்தில் நிம்மதியாக இருக்கவே அனைவரும் விரும்புவோம். சிலருக்கு ஆழ்ந்த தூக்கம் வராது. சின்ன சத்தத்திற்கே விழித்து கொள்வார்கள். சிலர் சத்தம் கேட்டால் தூங்கவே தொடங்கமாட்டார்கள். இந்த வேளையில் இடைவிடாது குறட்டை (ஸ்னோரிங்) சத்தம் கேட்டால்? வீடே அதகளம் தான். குறட்டை விடுபவர்களுக்கு உடல்ரீதியான பிரச்சனைகளும் இருக்கலாம். 

குறட்டை ஏன் வருகிறது? 

உறங்கும்போது தொண்டையில் இருக்கும் தசைகள் ஓய்வு நிலைக்கு செல்லும். இதனால் சுவாசப் பாதையின் அளவு தன்னியல்பாக குறுகும். அத்துடன் தொண்டையில் உள்ள சதை வளர்ச்சி, மூக்கில் உள்ள வளரும் சதை, தொப்பை, வயிறு பகுதியில் காற்றின் அழுத்தம், இதய பிரச்சனை, தைராய்டு போன்ற பல காரணங்கள் குறட்டைக்கு காரணமாக உள்ளது. 

Latest Videos


நோய் அறிகுறியா குறட்டை? 

குறட்டை விடும்போது சில சமயம் சத்தம் நின்றுவிடும். மூச்சு திணறுவது போலயிருக்கும். இதனை அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா என சொல்லப்படுகிறது. இப்படி இருந்தால் இதயம், நுரையீரல், தொண்டை தொடர்புடைய நோய்கள் இருக்கலாம். மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். 

இதையும் படிங்க: கரப்பான் பூச்சி தொல்லை தாங்கலயா? ஒரு எலுமிச்சை பழம் போதும்.. இப்படி பண்ணி பாருங்க!

சித்த மருத்துவம்! 

மல்லாந்து படுத்து கொள்வதை மாற்றி ஒரு பக்கமாக படுத்து கொள்ளலாம். இதனால் தொண்டை சதைகள் தளர்ச்சி அடைந்து குறட்டை குறையும். ஜலதோஷம், சைனஸ் ஆகிய பிரச்சனை இருந்தால் உறங்க செல்லும் முன்னர் மஞ்சள் தூள் போட்டு ஆவி பிடித்து கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் முன்பாக ஆவி பிடிக்கலாம். தினமும் மூச்சு பயிற்சி செய்வதை பழக்கமாக்குங்கள்.புகை, மது கூடவே கூடாது. உடல் எடை அதிகம் இருந்தால் முறையான உணவு பழக்கங்களால் அதை குறைத்து கொள்ளுங்கள். குறட்டையை தவிர்க்கலாம். இது தவிர சில தேநீரையும் சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. 

குறட்டையை விரட்டும் தேநீர்! 

சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவை சரிசமமாக எடுத்து தூளாக்கி காலை, இரவு ஆகிய வேளைகளில் தேநீராக அருந்தலாம். 

இலவங்கப்பட்டை, கிராம்பு, செம்பருத்தி பூ ஆகிய மூன்றையும் போட்டு தேநீராக அருந்தலாம். இந்த இரண்டு தேநீரும் தொண்டை பகுதிக்கு ஏற்றது. நல்ல தூக்கம் வரும். 

இதையும் படிங்க: ஆண்களுக்கு ஏன் வயது மூத்த பெண்கள் மீது அதிக ஈர்ப்பு வருகிறது தெரியுமா?

click me!