இன்றைய காலக்கட்டத்தில் மருக்கள் பலரைய பாடாய்படுத்துகிறது. பார்க்கவே அருவருப்பையும் ஏற்படுத்துகிறது. இந்த மருக்கள் 100இல் 20 பேரை குறி வைக்கிறது. மருக்கள் வலி கொடுக்காது ஆனால் அதை பார்த்தால் நம் அருகில் இருப்பவர்கள் கொஞ்சம் கூசிவிடுவார்கள். இது முகம் மட்டுமின்றி, கை, கால், விரல்கள், அக்குள் என எல்லா இடங்களிலும் ஏற்படுகிறது
சிலர் மருவை நீக்க அதன் மீது நெருப்பை வைப்பார்கள். சிலர் வலியை தாங்கிக் கொண்டு கத்தியால் வெட்டி விடுவார்கள். ஆனால் மருவை தற்காலிகமாக தான் தடுக்க முடிகிறது. வாழ்நாள் முழுக்க நீக்கவே முடியாது. குறிப்பாக மரு பரவக் கூடியது. நமக்கு ஒரு உறுப்பில் இருந்து மற்றொரு உறுப்புக்கு பரவுவதோடு, நம்மிடம் இருந்து பிறருக்கும் பரவும். இதை எப்படி தான் விரட்ட?? எளிய வழியில் விரட்டலாம். வெள்ளைப் பூண்டு மட்டும் போதும்.
வெள்ளை பூண்டு 6இல் இருந்து 7 பல் எடுங்கள். இதை தோல் நீக்கி பேஸ்ட் செய்யுங்கள். இதை வடிகட்டி அந்த சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் எலுமிச்சை சாற்றையும் பிழிந்து கொள்ளுங்கள். சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை மரு இருக்கும் இடத்தில் பூசுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு அப்படியே வைத்து விடவும். பின்னர் கழுவுங்கள். இப்படி 4 முதல் 5 நாட்கள் செய்து வந்தால் மரு தானாகவே உதிரும். மருக்கள் பிரச்சனையை நினைத்து கவலைப்படவே வேண்டாம்.