நரை முடி என்பது முதுமையின் நேரடி அறிகுறியாகும். ஆனால் இளநரை முடி ஒவ்வொரு நாளும் உங்களைத் தொந்தரவு செய்யும் ஒன்று. இது உங்கள் மனதில் மோசமான விளைவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் உங்கள் நம்பிக்கையையும் குறைக்கும். இது மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். உங்கள் தலைமுடி 25 வயதிற்குள் வெள்ளையாக மாறினால், அதை இளநரை என்று கூறலாம். வைட்டமின் 'பி 12' குறைபாடு அல்லது கடுமையான இரும்பு குறைபாடு காரணமாக முன்கூட்டிய வயதான அறிகுறிகள் இருக்கலாம். போதுமான புரதம், தாமிரம் மற்றும் பிற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாத மோசமான உணவு, இளநரைக்கு வழிவகுக்கும்.
இளநரையை எவ்வாறு சமாளிப்பது?
இளநரையைத் தடுக்க, உங்களுக்கு சத்தான உணவு தேவை. நீங்கள் உணவில் பச்சை காய்கறிகள், தயிர் மற்றும் புதிய பழங்களை சேர்க்க வேண்டும். இத்தகைய உணவை உட்கொள்வதன் மூலமும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலமும் இளநரையைத் தடுக்கலாம் மற்றும் அதன் தரத்தை மேம்படுத்தலாம். ஆனால், ஏற்கனவே வெள்ளை முடியுடன் நீங்கள் என்ன செய்ய முடியும்? வெள்ளை முடியை கருப்பாக மாற்ற உதவும் பல தீர்வுகள் உள்ளன. உங்கள் தலைமுடிக்கு வண்ணம் தீட்டவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்தவும் தேவையில்லை. அதற்கு பதிலாக சில வீட்டு வைத்தியம் பயன்படுத்துவதன் மூலம் வெள்ளை முடியை குறைத்து கருப்பாக மாற்றும்.
ஆம்லா - வெந்தயம்:
உலர்ந்த நெல்லிக்காயை பொடி செய்து கொள்ளவும். பின் சில வெந்தய விதைகளை எடுத்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். பேஸ்ட் போன்ற நிலைத்தன்மையைப் பெற தண்ணீரைச் சேர்க்கவும். ஹேர் மாஸ்க்கை தடவி இரவு முழுவதும் விடவும். மறுநாள் காலையில் லேசான ஷாம்பு கொண்டு கழுவவும். நெல்லிக்காயில் வைட்டமின் 'சி' நிறைந்துள்ளது. அதே சமயம் வெந்தய விதைகளில் முடியின் தரத்தை மேம்படுத்தும் பயனுள்ள ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை இரண்டும் சேர்ந்து முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், இளநரையைத் தடுக்கும்.
கறிவேப்பிலை - தேங்காய் எண்ணெய்:
சிறிது கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் காய்ச்சவும். இலைகள் கருப்பாகும் வரை கொதிக்க வைக்கவும். பின் அவற்றை குளிர்விக்க விடவும். அதை உங்கள் தலைமுடியில் மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விடவும். மறுநாள் காலை உங்கள் தலைமுடியை லேசான ஷாம்பு கொண்டு அலசவும். ஒவ்வொரு முறையும் நீங்கள் தலையை கழுவும் போது, இந்த எண்ணெயை உங்கள் தலைமுடிக்கு தடவுவதை நினைவில் கொள்ளுங்கள். கறிவேப்பிலையில் உள்ள 'பி' வைட்டமின்கள் முடி நரைப்பதைத் தடுக்கும். அதே வேளையில் மயிர்க்கால்களில் மெலமைனை மேம்படுத்த உதவுகிறது.
பாதாம் எண்ணெய் - எலுமிச்சை சாறு:
பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு, இரண்டையும் 2:3 என்ற விகிதத்தில் கலக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியில் நன்கு மசாஜ் செய்யவும். 30 நிமிடம் விட்டு, லேசான ஷாம்பு கொண்டு கழுவவும். பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் 'ஈ' முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து, முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கும். எலுமிச்சை சாற்றில் வைட்டமின் 'சி' நிறைந்துள்ளது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
இதையும் படிங்க: என்ன உப்பு சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையுமா? இது சாத்தியமா?
பிளாக் டீ:
இதைச் செய்ய, ஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் 2 தேக்கரண்டி கருப்பு தேயிலை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்க்கவும். அது பாதி அளவு வரும் வரை கொதிக்க விடவும். நன்கு ஆறிய பின் அதை முடியில் தடவும்
இது உங்கள் தலைமுடிக்கு சாயம் பூசுவதற்கான இயற்கை வழி. பிளாக் டீ உங்கள் தலைமுடியை பளபளப்பாக மாற்றவும் உதவும்.