சில நேரங்களில் நெஞ்செரிச்சல் என்பது மாரடைப்பாக தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.அவை இரண்டும் மார்பு வலியை ஏற்படுத்தும் என்றாலும், சரியான மருத்துவ கவனிப்பைப் பெறுவதற்கு இவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது அவசியம். மார்பு வலி பல்வேறு காரணிகளால் ஏற்படலாம், இது தசை வலி, மாரடைப்பு அல்லது நெஞ்செரிச்சலை குறிக்கிறதா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்பதால் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் அதை அலட்சியம் செய்வது ஆபத்தாக முடியும்.