சர்க்கரை நோய் என்பது ஒரு நோய் மட்டுமல்ல உடலின் அனைத்து செயல்பாடுகளையும் பாதிக்கும் நோய். சர்க்கரை நோய் என்பது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு வேகமாக அதிகரித்து, உடலால் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் நிலை.
நீரிழிவு மேலாண்மை வழக்கத்தில் சில பானங்கள் சேர்க்கப்படலாம் என்றாலும், இரத்த சர்க்கரை அளவுகளில் அவற்றின் விளைவைக் கருத்தில் கொள்வது அவசியம். அந்தவகையில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் 2 பானங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
வெந்தய நீர்: வெந்தய நீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சுமார் 10 கிராம் வெந்தயத்தை வெந்நீரில் ஊறவைத்து குடித்தால், டைப்-2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் நார்ச்சத்து உள்ளது. செரிமான செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது. மேலும்,
இது கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகளை உறிஞ்சுவதை மேலும் ஒழுங்குபடுத்துகிறது.
இதையும் படிங்க: சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கிறீங்களா? நீரிழிவு நோய் வரலாம்.. ஜாக்கிரதை..!
இலவங்கப்பட்டை தண்ணீர்: இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரையை குறைக்கவும் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடவும் உதவும். இரத்த ஓட்டத்தில் இருந்து செல்களுக்கு சர்க்கரையின் இயக்கத்தை அதிகரிக்கிறது. இது இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையில் காணப்படும் இயற்கை கூறுகள் இரத்த குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்க இன்சுலினாக செயல்படுகிறது.