வெறும் வயிற்றில் இதனை எடுத்தால் உடற்சூடு, உடல் எடை ,சிறுநீரக பிரச்னை இன்னும் நிறைய பிரச்னைகளை சரி செய்யுமாம்!

First Published | Apr 27, 2023, 11:13 AM IST

வெள்ளைப்பூசணி சாறு செய்து குடித்தால் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நலன்களை அள்ளித்தரும் . அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
 

தினமும் காலை நேரத்தில் டீ, காபி போன்றவற்றிக்கு பதிலாக இயற்கையாக கிடைக்கக்கூடிய காய்கறிகளுள் ஒன்றான வெள்ளைப் பூசணி வைத்து சாறு அல்லது ஜூஸ் செய்து குடித்தால் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நலன்களை அள்ளித்தரும்.அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

வெள்ளைப் பூசணியில் அதிகளவில் வைட்டமின் பி, வைட்டமின் சி , சுண்ணாம்பு சத்து , பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகிறது .மேலும் குறிப்பிட்டு சொன்னால் இதில் அதிகளவு நீர்ச்சத்து இருக்கிறது. பூசணிக்காய் வயிற்றில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது.

பூசணியை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும். மேலும் பூசணிக்காய் சாப்பிடுவதால் கண் பார்வை சிறந்து விளங்கும்.

பூசனை சாறு எடுத்துக் கொண்டால் உண்டாகும் பயன்கள்:

பூசணிக்காயில் இருக்கும் அதிகமான நார்ச்சத்து உடல் எடையை மளமளவென குறைந்து ஸ்லிம்மாக மாறுவதை நீங்கள் வெகு விரைவில் உணரலாம். அதோடு உடலில் இருக்கும் இரத்தத்தை சுத்திகரித்து எந்த ஒரு நோயினையும் ஆண்ட விடாமல் தடுக்கும்.

உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
 

சிறுநீரகத்தில் தொற்று இருப்பவர்களுக்கு சிறுநீருடன் இரத்தம் வெளிவருவதை உடனே கட்டுப்படுத்தும். மேலும் பைல்ஸினால் ஏற்படும் இரத்தக் கசிவுவையும் தடுப்பதற்கு சிறந்த பானம் என்றே கூற வேண்டும்.

அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதோடு அல்லாமல்  காரசாரமான உணவுகள் மற்றும் அதிக நேரம் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் உண்டாகும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடுவதில் சிறந்து விளங்குகிறது. 

தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
இதில் கலோரிகள் குறைவாக இருப்பதாலும், நீர்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் உடல் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை நீக்கும். 

உடலில் இருக்கும் இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியை மிகவும் சிறப்பாக செய்வதுடன், ரத்தக் கசிவையும் நீக்குகிறது. தவிர வலிப்பு நோயினையும் குணமாக்குகிறது.

குடலில் இருக்கும் நாடாப்புழுக்கள் வெளியேற்ற மிக சிறந்த மருந்து என்றே கூறலாம்.தவிர ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், தலைசுற்றல்,வாந்தி போன்றவற்றை நீக்கப் இதனை பயன்படுத்தலாம்.

Tap to resize

தினமும் காலை மற்றும் மாலை வெள்ளை பூசணி சாறில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் சிறுநீரகம் சம்பந்தமான நோய்களை தீர்க்கும்.

பூசணி சாறு செய்வது எப்படி:

பூசணியை தோல் சீவி விதைகளை எடுத்து விட்டு சிறிய அளவில் வெட்டி விட்டு மிக்சி ஜாரிலும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி ஒரு க்ளாஸ் எடுத்து கொண்டு சிறிது உப்பு, 1/2 எலுமிச்சை சாரி , சிறிது தேன் , 2 புதினா இலைகள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து குடிக்க வேண்டும்.

வாழைக்காய் வைத்து பஜ்ஜியே செய்யாதீங்க! இப்படி கோலா உருண்டை செஞ்சு கொடுங்க! 10 சாப்பிட்டாலும் பத்தல என்பார்கள்

Latest Videos

click me!