திருமணத்தில் வயது வித்தியாசம் முக்கியமாக கருதப்படுகிறது. ஒரே வயது உடையவர்கள் அல்லது 1 முதல் 6 வயது வித்தியாசம் உடையவர்கள் திருமணம் செய்யும்போது மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் காதலுக்கு இதெல்லாம் தெரிவதில்லை. சிலர் தன்னைவிட 20 ஆண்டுகள் வயது வித்தியாசம் கொண்டவர்களை கூட மணந்து கொள்கின்றனர். ஆண்கள் தங்கள் மகளையொத்த வயதுடைய பெண்களை மணக்கும் போது என்னமாதிரியான அனுபவங்கள் கிடைத்தன என்ற பதிவு தான் இது.
வயதில் குறைந்த பெண்களை மணம் முடிக்கும் போது உடலுறவு கொள்வதில் சில முரண் உண்டாகிறது. இளமை துடிப்புடன் இருக்கும் அந்த பெண்கள் செக்ஸில் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இதனால் அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக கணவரும் ஆக்டிவாக இருந்தால் பிரச்சனை இல்லை. கணவரும் பாலுணர்வுடன் செயல்படும்போது உறவு கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் உடலுறவில் நாட்டமில்லாமல் இருக்கும்போது, இளம்பெண்களை மணப்பது சிக்கலை உண்டாக்கும்.
தன்னைவிட 11 ஆண்டுகள் இளம் வயதுள்ள பெண்ணை மணந்தவர்.. தன் மனைவியை விளையாட்டுத்தனமானவர் என்கிறார். ஆரம்பத்தில் அதை ரசித்தாலும் கூட ஆண்டுகள் உருண்டோடும்போது அதில் சலிப்பு வந்துவிட்டது. எல்லா விஷயங்களுக்கும் அவரையே மனைவி சார்ந்திருப்பதாகவும், பக்குவபடவே இல்லை என்றும் தெரிவித்தார். கிட்டத்தட்ட 23 வயது பெண்ணை தத்தெடுத்தது போல தான் உணர்வதாக கூறுகிறார்.
இதையும் படிங்க: நண்பர்களாக இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்டால் என்னாகும் தெரியுமா?