ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம்.
சீஸ் என்பது ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். சீஸில் கால்சியம், கொழுப்பு, புரதம், சோடியம், பாஸ்பேட், துத்தநாகம், வைட்டமின் ஏ, பி12 போன்றவை உள்ளன. எனவே சீஸ் சாப்பிடுவது உடலுக்கு வேண்டிய பல்வேறு ஊட்டச்சத்துக்களை உடனடியாக பெற உதவுகிறது.
எலும்புகளுக்கு வலு சேர்க்கும்
சீஸ் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியம். எனவே கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த சீஸ் சாப்பிடுவது எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு மிகவும் நல்லது.