நம்மூரில் நாம் பல விதமான மரங்களை பார்த்திருப்போம். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு விதத்தில் மருத்துவ குணத்தை தரும் பண்பு கொண்டதாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் தென்னை மரம் தரும் தென்னங்குருத்தின் மருத்துவ பலன்களை இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
நலம் தரும் தென்னை:
தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தென்னம்பூ, இளநீர், தென்னை ஓலை, தென்னங்குருத்து என ஒவ்வொன்றும் மனித குலத்திற்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. ஆனால் இதன் மருத்துவ பயன்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.
இனிமையான தென்னங்குருத்து:
நம்மில் பலர் தென்னங்குருத்தை சாலைகளில் தள்ளு வண்டிகளில் விற்பதை பார்த்து கடந்து சென்றிருப்போம் .ஆனால் அது எவ்ளோ மருத்துவ தன்மை கொண்டது என்று பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள். இனி இந்த பதிவை படித்தால் , அடுத்த முறை தென்னங்குருத்தை பார்க்கும் போது கடந்து செல்லாமல் வாங்கி கொண்டு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுவீர்கள்.
தென்னைமரத்தின் அடி தண்டை வெட்டினால் அதனுள்ளே வெண்மையான பகுதி ஒன்று இருக்கும். அதுவே தென்னங் குருத்தாகும். இதனை பொள்ளாச்சி, மதுரை, கேரளா போன்ற ஊர்களில் அதிக அளவில் விற்பார்கள். இதில் பல்வேறு மருத்தவ குணங்கள் உள்ளன.