மாரடைப்பு ஏற்படாமல் இருக்க நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்யும் 'சூப்பர்' உணவுகளை தினமும் எடுத்துக்கோங்க!

First Published | Apr 19, 2023, 7:42 PM IST

மாரடைப்பை தடுக்க உதவும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க என்னென்ன பொருட்களை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
 

இன்றைய இயந்திர காலத்தில் அவசரம் அவசரமாக மக்கள் துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தான் அதிகளவில் சாப்பிடுகிறார்கள். இது உடலிற்கு பல்வேறு விதங்களில் ஆபத்தை ஏற்படுத்துகிறது. தவிர உயிருக்கு ஆபத்தான நிலைகளை கூட உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.

இன்றைய இளம் தலைமுறையினரில் பலரும் குளிர் பானங்கள், பீட்சாக்கள், சிப்ஸ் வகைகள் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்வதால் அது நமது வாழ்வியல் முறையில் பல்வேறு நோய்களை இலவசமாக பரிசளிக்கின்றன. அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் கொலஸ்ட்ரால் பிரச்னையை கூறலாம்.

மனிதர்களுக்கு நல்ல கொழுப்பு(HDL) மற்றும் கெட்ட கொழுப்பு(LDL ). என்று 2 விதமான கொலஸ்ட்ரால்கள் உள்ளன . இப்படியான கெட்ட கொழுப்பு நமது உடலில் அதிகரித்தால் அது நமக்கு மாரடைப்பு வரை கொண்டு செல்கிறது.

நமது உடலிற்கு நல்ல கொலஸ்ட்ரால் சிறந்த செயல்பாட்டினை தருகிறது. இந்த நல்ல கொழுப்பு இரத்த நாளங்களில் இருக்கும் கெட்ட கொழுப்பை வெளியேற்றுகிறது. தவிர நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

HDL கொலஸ்ட்ரால் உடல் செல்களை உருவாக்க சிறந்த பணியை செய்கிறது. இது கெட்ட கொலஸ்ட்ராலை கல்லீரலுக்கு அனுப்பி அதன் மூலம் அதனை கரைத்து உடலில் இருந்து வெளியேற்றுகிறது.

கெட்ட கொழுப்பபானது நரம்புகளிலும், இதய தமனிகளிலும் அடைப்பை ஏற்படுத்தும் தவிர இரத்த ஓட்டத்தை நிறுத்தி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க செய்கிறது.

ஆக உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க என்னென்ன பொருட்களை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

 

கெட்ட கொலஸ்ட்ராலின் எதிரியான உணவுகள்:

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை பெற்றுளளது. அதே நேரத்தில் நல்ல கொலஸ்ட்ராலையும் அதிகரிக்க செய்கிறது. இதன் நுகர்வு இதயத்தை பாதிப்பாக்கும் ட்ரைகிளிசரைடுகளின் அளவையும் மட்டுப்படுத்துகிறது.

Tap to resize

சோயாபீன்:

அசைவத்திற்கு ஒரு நல்ல மாற்றாக சோயாபீன்ஸைகூறலாம்,. இதன் நிறைவுறா கொழுப்பு, நார்ச்சத்து, புரதத்தின் ஆகியவை உடலிற்கு தேவையான சத்துக்களாக உள்ளன.

இதில் இருக்கும் ஐசோஃப்ளேவோன்கள் HDL என்ற நல்ல கொழுப்பினை அதிகரிக்க செய்கின்றன. மேலும் இதிலிருக்கும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் LDL என்ற கெட்ட கொழுப்பினை குறைக்கும் தண்மை கொண்டது.

வால் நட் :

அக்ரூட் என்னும் வால்நட் பருப்பில் ஒமேகா-3 கொழுப்பு அதிகமாக இருக்கிறது. இது 1 விதமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலமாகும். இது இதயத்தை ஆரோக்கியமாகவும் அதே நேரத்தில் வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது கெட்ட கொழுப்பைக் குறைத்து HDL என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது.

சியா விதைகள்:

சியா விதைகலில் அதிகளவில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் பிற முக்கியமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதனை உணவில் சேர்த்துக் கொண்டால் அது LDL எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைப்பதோடு, HDL என்னும் நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. அதோடு மட்டுமல்லாமல் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.

பார்லி:

தனியா வகைகளில் ஒன்றான பார்லி, பீட்டா-குளுக்கனின் சிறந்த மூலங்களில் ஒன்றாகும். இதில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து HDL என்ற நல்ல கொழுப்பினை அதிகரிக்க செய்கிறது. அதே நேரத்தில் LDL என்ற கெட்ட கொழுப்பினை குறைக்க செய்கிறது.

இப்படியான உணவுகளை தினமும் எடுத்துக் கொண்டு வந்தால் , மாரடைப்பு உட்பட இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இஞ்சி மற்றும் பூண்டினை ரொம்ப நாள் ஃபிரெஷா வச்சுக்க இந்த மாதிரி பண்ணுங்க!

Latest Videos

click me!