Summer Fruits : கோடைக் காலத்தை சமாளிக்க உதவும் 5 பழ வகைகள்..!!

First Published | Mar 15, 2023, 2:12 PM IST

கோடை காலத்தில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பிரச்சனை டீஹைட்ரேஷன். நிறைய தண்ணீர் குடிக்கவும். அதேபோல், இந்த நேரத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க பலரும் தவறுவிடுகின்றனர். தண்ணீர் குடிப்பது கஷ்டமாக இருந்தால், இந்த பழங்களை சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
 

கோடை வெயில் அதிகமாக இருந்ததால் தாகமும் சோர்வும் எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். கோடை காலத்தில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பிரச்சனை டீஹைட்ரேஷன் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் யாரும் முறையாக தண்ணீர் குடிப்பது கிடையாது. இதனால் சிறுநீரக பாதிப்பு, சிறுநீர் கழிக்கும் போது நமச்சல், உடல் சோர்வு, பசி மயக்கம் போன்ற பிரச்னைகள் தோன்றும். இந்த நேரத்தில் உடலை குளிர்விக்க பழங்கள், பழச்சாறுகள் மற்றும் தண்ணீர் குடிப்பது மட்டுமே நல்ல பலனை தரும். எனவே கோடையில் சாப்பிட வேண்டிய சில பழங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்

mango

மாம்பழம்

இந்தப் பட்டியலில் மாம்பழம்தான் முதலில் இடம்பிடித்துள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் ஏ, பி6, சி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைய உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மையை தருவதாகும். குறிப்பாக கோடையில் மாம்பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கும் நல்லது. மாம்பழத்தை விட, மாங்காயும் நல்ல பலன்களை உடலுக்கு வழங்குகிறது.

Tap to resize

watermelon

தர்பூசிணி

தர்பூசணி வெயில் காலத்தில் தாகத்தைத் தணித்து, உடலுக்கு ஊட்டமளித்து, மனதை புத்துணர்ச்சியடையச் செய்கிறது. தர்பூசணியில் 95% வரை நீர்ச்சத்து மட்டுமே உள்ளது. எனவே கோடையில் தர்பூசணி சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு போதிய நீரேற்றம் கிடைத்துவிடும். உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு மட்டுமில்லாமல், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதயத்தை சரியான முறையில் செயல்படுத்தவும் தர்பூசிணிப் பழங்கள் உதவுகின்றன.

ஸ்ட்ராபெர்ரி

இந்த பட்டியலில் அடுத்துவுள்ள படம் ஸ்ட்ராபெர்ரி. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் பிற தாதுக்கள் நிறைந்த காணப்படுகின்றன. கோடையில் இதனுடைய விளைச்சல் அதிகமாக இருக்கும் என்பதால், ஸ்ட்ராபெர்ரி பழங்களை வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மேலும் ஜாம், பழச்சாறு மற்றும் எஸன்சாக மாற்றி குடிப்பதை விடவும், ஸ்ட்ராபெர்ரி பழங்களை அப்படியே சாப்பிட பழக்கிக் கொள்ளுங்கள்.
 

Orange

ஆரஞ்சு

பட்டியலில் அடுத்த இடத்தில் ஆரஞ்சு உள்ளது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி கண் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆரஞ்சுப் பழங்கள் நல்ல செரிமான ஆரோக்கியத்தை உடலுக்கு வழங்குகின்றன.

உங்கள் கணவர் வீட்டு வேலைகளில் உதவாததற்கு 4 காரணங்கள்..!!

papaya

பப்பாளி

இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் பப்பாளி உள்ளது. வைட்டமின் சி, ஏ மற்றும் பி நிறைந்துள்ள பப்பாளியில் 91-92% நீர்ச்சத்து உள்ளது. பப்பாளியில் தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. பப்பாளி செரிமானத்தை எளிதாக்குவதற்கும், மலச்சிக்கலைத் தடுப்பதற்கும், இதய ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும், சருமத்தைப் பாதுகாப்பதற்கும் பெரிதும் உதவுகிறது.
 

Latest Videos

click me!