முடிந்த அளவுக்கு பழங்களை உண்ணும் போது, பழச்சாறாக குடிக்காமல் அப்படியே பழமாக சாப்பிடுவது மிகவும் நல்லது. தற்போதைய நவீன உலகில் ஆப்பிள் பழத்தை கொஞ்சம் கூடுதல் கவனமுடன் சாப்பிடுவது நல்லது. ஏனெனில், ஆப்பிள் எளிதில் கெட்டு விடாமல் இருக்கவும், அதன் பளபளப்புத்தன்மை மாறாமல் இருக்கவும், ஆப்பிளின் மேற்புறம் மெழுகு பூசப்படுகிறது. ஆகவே, ஆப்பிளை சாப்பிடும் போது மேல் தோலை சீவி விட்டு சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது.