Sabja Seeds : உடல் சூட்டைத் தணிக்கும் சப்ஜா விதைகளின் ஆரோக்கியப் பலன்கள்!

First Published Sep 22, 2022, 4:15 PM IST

நம்மில் சிலருக்கு உடல் சூடாகி பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. இதனைத் தவிர்க்க பலரும் பல வகைகளில் முயற்சித்து வருகின்றனர். ஆனால், உடல் சூட்டைத் தணிப்பதில் சப்ஜா விதைகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. எனவே தான், கோடை காலங்களில் ரோஸ்மில்க் மற்றும் பாதாம் மில்க் உள்ளிட்ட பானங்களில் சப்ஜா விதைகள் கலக்கப்படுகின்றன. இந்த விதைகள் நம் உடல் நலனைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

சப்ஜா விதைகளின் பயன்கள்

சப்ஜா விதைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், மலச்சிக்கல் உள்ளவர்கள் தொடர்ந்து இதனை சாப்பிட்டு வர கூடிய விரைவில் மலச்சிக்கல் நீங்கும்.

சப்ஜா விதைகளை சாப்பிடுவதன் மூலம் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

சப்ஜா விதைகளில் கலோரிகள் மிகவும் குறைவு. இதனை உட்கொள்வதால், உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.

சப்ஜா விதைகள் நீரிழிவைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

மரவள்ளிக் கிழங்கு அடை செய்வது எப்படி?

ஒரு ஸ்பூன் சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

சப்ஜா விதையில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் உள்ளது. இந்த அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பது மட்டுமில்லாமல் இரத்தசோகையையும் தடுக்கிறது.

Fruit Desert : சமையல் அறைக்கு செல்லாமல் ஒரு ரெசிபி செய்வோமா?

உணவுக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டு நெஞ்செரிச்சல் உள்ளவர்கள், இரவில் ஊறவைத்த சப்ஜா விதைகளை மறுநாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வர உணவுக் குழாய் பிரச்னைகள் அகலும்.

மாதவிலக்கின் போது பெண்களுக்கு உண்டாகும் அடிவயிற்று வலியைப் போக்க சப்ஜா விதைகள் உதவுகிறது.

click me!