Hair care : இனி தலைமுடிக்கு ‘டை’ அடிக்காதீங்க..!! இதை செய்யுங்க போதும்..!!

First Published | Sep 22, 2022, 7:35 AM IST

இன்றைய காலத்தில் பலருக்கும் இளம் வயதிலேயே நரை முடி வந்துவிடுகிறது. இதனால் டை அடிப்போரின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. நரை முடிக்கு டை அடிப்பதால் கருப்பாக மாறினாலும், அதிலுள்ள ரசாயனங்களால் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. நரை முடிக்கு டை அடிப்பதில் துவங்கிய, இறுதியாக முடியை இழந்துவிடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடுகிறது. ரசாயனம் கலந்த டை அடிப்பதால் உடல்நலனும் பாதிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக இயற்கை சாயங்களை கொண்டு டை தயாரித்து பயன்படுத்தலாம். இயற்கையாக டை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
 

பீட்ரூட் போட்டு சிவப்பாக்கலாம்

பல்வேறு சத்துக்கள் கொண்ட பீட்ரூட்டில் ஆண்டி ஆக்சிடண்ட் நிறைந்து காணப்படுகிறது. அதேபோன்று கேரட்டிலும் நிறைய சத்துக்கள் உள்ளன. இவை இரண்டும் முடிக்கு வலுவூட்டும் தன்மைகளை கொண்டுள்ளன. இதிலிருந்து சாறு எடுத்து, நன்றாக மசித்து பேஸ்டு போல செய்யவேண்டும். அதை கூந்தல் அல்லது முடியின் தன்மை ஏற்றவாறு எடுத்து உச்சி முதல் நுனி வரை தடவி எடுக்கவும். முழுவதுமாக தடவிய பிறகு சுமார் 30 நிமிடங்கள் வரை கூந்தலை உலரவிட்டு கழுவி எடுகக்வும். அதை தொடர்ந்து குறைந்தளவில் வீரியம் கொண்ட ஷாம்பூவால் மீண்டும் கழுவ வேண்டும். குறிப்பாக கலரிங் பாதுகாப்பு கொண்ட ஷாம்பூவை பயன்படுத்தினால் மிகவும் நல்லது.
 

காபி கொண்டு கருப்பாக்கலாம்

ஒருவேளை கருப்பு நிறத்தை விரும்புபவர்கள், காஃபி கொட்டையை நன்றாக அரைக்க வேண்டும். அதை மூன்று பங்கு தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிட வேண்டும். ஒரு பங்காக தண்ணீர் குறைந்தவுடன், அதில் கூந்தலை விட்டு நன்றாக அலசிடவும். அதை தொடர்ந்து கூந்தல் நன்றாக குளிர்ந்தவுடன், கழுவிட வேண்டும். ஒருவேளை நீங்கள் கருஞ்சிவப்பான நிறத்தை விரும்பினால், காஃபி கொட்டையுடன் சேர்த்து கிராம்பு வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம்.

Tap to resize

சாம்பல் நிறத்துக்கு இருக்கு மருதாணி

பண்டைய காலந் தொட்டு கூந்தலில் மருதாணி தடுவும் நடைமுறை இருந்து வருகிறது. இது முடிக்கு வண்ணம் தருவதோடு, நிலையான ஊட்டமளிக்கிறது. அதை அரைத்து கேசத்தில் தடவினால், நிறம் ஒரு மாதம் வரை இருக்கும். மருதாணி இலைகளை பயன்படுத்துவதைக் காட்டிலும் மருதாணி பொடி விரைந்து பயன் தரக்கூடியதாக உள்ளது. அரைகப் மருதாணி பொடியை, அரை கப் தண்ணீரில் கலந்து பேஸ்டாக்கி தலையில் தடவ வேண்டும். ஒருவேளை பழுப்பு நிறம் தேவை என்றால் கிராம்பு சேர்க்கலாம்.

குங்குமப் பூவில் அடர் சிவப்பு நிறம்

ஒரு தேக்கரண்டி குங்கமப்பூவை, இரண்டு கப் தண்ணீரில் சேர்த்து 20 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். குங்குமப் பூ நீர் குளிர்ந்தவுடன் உச்சந்தலை முதல் நுனி வரை நன்றாக தடவ வேண்டும். மைல்டான ஷாம்பூ கொண்டு கூந்தலை அலசினால், சில நாட்கள் அந்த நிறம் கேசத்தில் இருக்கும்.

பழுப்பு நிறத்துக்கு வால்நட் ஓடு

வால் நட் சாப்பிட்டுவிட்டு, அதனுடைய ஓடைகளை நாம் வீசி எரிந்துவிடுவோம். ஆனால் அந்த ஓட்டை பக்குபவப்படுத்தி பயன்படுத்துவதன் மூலம், இயற்கையான முறையில் டை தயாரிக்கலாம். வால்நட் ஓடுகளை நசுக்கி, அந்த பொடியை அரை நிமிடம் தண்ணீரில் கொதிக்க விடவும். அது குளிர்ந்தவுடன் கூந்தலில் தடவிடலாம். அதை சுமார் 1 மணிநேரம் முதல் 2 மணிநேரம் வரை ஊறவைத்து ஷாம்பூ கொண்டு கழுவலாம். இது தலைமுடிக்கு அடர்ந்த பழுப்பு நிறத்தை அளிக்கும்.

இயற்கையான முறையில் கூந்தலுக்கு டை அடிப்பது எல்லாமே தற்காலிமானவை தான். இதன்மூலம் கிடைக்கும் நிறங்கள் வெகு சில மணிநேரம் அல்லது சில நாட்கள் மட்டுமே கூந்தலில் தங்கும் என்றாலும், இவை எல்லாமே பக்கவிளைவுகள் இல்லாதவை தான். எளிமையாக வீட்டில் தயாரிக்கலாம் என்பதால், இந்த வழிமுறைகளை யாருவேண்டுமானாலும் முயற்சிக்கலாம்.
 

Latest Videos

click me!