Skin Care Tips : கொத்தமல்லி அரைச்சு ஃபேஸ்பேக் போட்டா போதும்- உங்க முகம் எப்படி இருக்கும் தெரியுமா?

First Published | Sep 21, 2022, 6:09 AM IST

இந்தியாவில் இருக்கும் பலரும் கருப்பாக இருந்தாலும் சரி, வெள்ளையாக இருந்தாலும் சரி தங்களுடைய மிகவும் பொலிவாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இன்றைய காலத்தில் இதே எண்ணம் ஆண்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் எந்தவிதமான செயற்கை பூச்சு மற்றும் க்ரீம்களும் இல்லாமல், நம்முடைய வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் கொத்தமல்லி இலைகளை வைத்து முகத்தை பளீச்சிட வைப்பதற்கான வழிமுறைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 

கொத்தமல்லி

சாம்பார் தொடங்கி ரசம், அசைவ உணவுகள், ரசம், பொரியல், சாண்டுவெஜ் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களுக்கு மணமும் குணமும் சுவையும் சேர்ப்பதில் கொத்தமல்லி இலைகளுக்கு முக்கிய பங்குள்ளது. இதனுடைய இலை மட்டுமில்லாமல், தண்டு, விதை மற்றும் வேர் உள்ளிட்டவற்றில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. உணவுகளுக்கு சுவையும் மணமமும் மட்டும் சேர்க்கமால் வைட்டமின் ஈ, கால்ஷியல் மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்டவை உள்ளன. அதனால் இது சமையலை கடந்து சரும பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு பெரிதும் உதவும் குணநலன் கொண்டது.

கரும்புள்ளிகளை விரைந்து அகற்றும்

முகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் கரும்புள்ளிகள், தோற்றத்தையே மாற்றிவிடும். இந்த பிரச்னையால் அவுதியுற்று வருபவர்களுக்கு கொத்தமல்லி நல்ல பயனை தருகிறது. கொத்தமல்லியை கழுவி நன்றாக அரைத்துக் கொண்டு சாறு எடுத்திடுங்கள். அதிலிருந்து 2 ஸ்பூன் மட்டும் எடுத்து, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்துகொள்ளுங்கள். அதை கரும்புள்ளிகள் கொண்ட இடங்களில் தடவி, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீர்ல் கழுவிடுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால், முகம் பொலிவு பெறும்.

காய்ச்சலுக்கு ஆண்டிபயாடிக் சாப்பிடும் போது மது அருந்தலாமா?

Latest Videos


சருமம் மென்மை அடையும்

அவரவர் வெளியில் அலைவதை பொறுத்து சருமத்தின் தன்மை அமைகிறது. எனினும் தங்களுடைய சருமம் மென்மையாக இருக்க வேண்டும் என்று பலரும் விரும்பவதுண்டு. அதற்கு கொத்திமல்லி இன்றியமையாத பயனை தருகிறது. 2 தேக்கரணடி கொத்தமல்லி சாற்றுடன், 2 ஸ்பூன் பால் சேர்க்க வேண்டும் (பசும்பால் இருந்தால் இன்னும் சிறப்பு). அதனுடன் 4 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றை சேர்த்திட வேண்டும். இதை முகத்தில் தடவி, 5 நிமிடங்கள் கழித்து கழுவிட வேண்டும்.  வாரமிருமுறை இப்படி செய்வது சருமத்தில் படிப்படியான மாற்றத்தை கொண்டு வரும்.

இந்த எளிய வழிமுறைகளைச் செய்து பாருங்கள்- உடனடியாக ரத்தக் கொதிப்பு சராசரி நிலைக்கு வரும்..!!

சருமத்துக்கு பொலிவு கிடைக்கும்

முகத்தில் இருக்கும் கருமையான திட்டுக்களை போக்கவும் கொத்தமல்லி உதவி செய்கிறது. கொத்தமல்லி சாறு, கற்றாழை ஜெல், தயிர் மூன்றையும் சமளவு சேர்த்து, கலந்து முகத்தில் தடவி வர வேண்டும். வாரமிருமுறை இப்படி செய்து 10 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிடுங்கள். விரைவாக முகத்தில் கரும் திட்டுக்கள் நீங்கள், ஒரேவிதமாக பொலிவு கிடைக்கும்.
 

பெரும் உதவி செய்யும் கொத்தமல்லி ஃபேஸ்பேக்

ஒரு ஸ்பூன் கொத்தமல்லி இலைகள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் கற்றாழை சாறு, ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தண்ணீர் சேர்க்கக்கூடாது. அதை ஃபேஸ்பேக்காக போட்டு, முகத்தில் 20 நிமிடங்கள் வரை உலர விட வேண்டும். அதையடுத்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், உங்களுடைய முகத்தில் நல்ல வித்தியாசத்தை பார்க்க முடியும்.
 

click me!