பலருக்கு காலையில் தேநீர், காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. காபி ஒரு சக்திவாய்ந்த பானம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காபி நமது வயிற்றை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இருப்பினும், பலர் மருந்துகளையும் தேநீர், காபியுடன் எடுத்துக்கொள்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா? தேநீர், காபியில் காஃபின், நிக்கோடின், தியோப்ரோமைன் மற்றும் 5 ஆல்கலாய்டுகள் உள்ளன. இவை மருந்துகளின் விளைவைக் குறைக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி, அவை உறிஞ்சுதலைத் தடுக்கின்றன. எனவே, தேநீர், காபியுடன் எந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை இப்போது பார்க்கலாம்.