படிக்கும் குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுப்பது நல்லதா? கெட்டதா?

First Published | Apr 24, 2023, 8:47 PM IST

இந்த டிஜிட்டல் உலகில் மொபைல் போன் இல்லாதவர்களை பார்க்க முடியாது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் ஒரு டிஜிட்டல் சாதனம் ஆகும். இது குழந்தைகளின் மனம் மற்றும் உடன் நலனை பாதிக்கிறது. எனவே குழந்தைகளுக்கு மொபைல் போன் அவசியமா? என்பதை பெற்றோர்கள் தீர்மானிக்க வேண்டும். குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து காணலாம்...
 

இன்றைய நிலையில் மொபைல் போன் இல்லாத வாழ்க்கையை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. ஸ்மார்ட் போன் என்பது அனைவரின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகிவிட்டனர். குறிப்பாக கேம்ஸ் மற்றும் யூடியூப் வீடியோக்களுக்கு குழந்தைகள் அடிமையாகிறார்கள்.
 

குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்:

மொபைல் போன் தாக்கம்:
குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதினால் தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுறுத்துகளை கேட்க மறுகின்றன.

இதையும் படிங்க: கோடை வெயில் தாக்கம்...அதிக அளவு முடி உதிர்வா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Latest Videos


கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பு:

செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு கண்களுக்கு தீங்கு விளைப்பதோடு, மூளையை பாதிப்படையச் செய்யும். இதிலிருந்து வரும் கதிர்வீச்சு மூளையின் நினைவாற்றலை பாதிக்கிறது.

உடல் நலன் கேடு:

குழந்தைகள் அதிக அளவு மொபைல் போன் பயன்படுத்தினால் அவர்களுக்கு தலைவலி, மன சோர்வு, மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டலாம். எனவே பெற்றோர்கள் உங்கள் குழந்தைகள் மொபைல் போனில் எவ்வளவு நேரத்தை  செலவிடுகிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் இருக்கும் ஆபத்து:

ஆன்லைனில் நடைபெறும் மோசடிகள் மற்றும் குழந்தைகளுக்கு நடைபெறும் பாலிய வன்புறவுகளைப் பற்றி பெற்றோர்கள் எடுத்துக் கூற வேண்டும். குறிப்பாக குறிப்பாக அந்நியர்களுடன்உரையாடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

படிப்பு பாதிப்பு:

குழந்தைகள் அதிக நேரம் மொபைல் போனை பயன்படுத்தினால், அது அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை தூண்டாது. மேலும் இது அவர்களின் சமூக வாழ்க்கைக்கு கேடு விளைவிக்கும்.

பின்பற்ற வேண்டியவை:

முதலில் பெற்றெடுத்த தங்கள் குழந்தைகள் முன் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பின் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை அதிகரிக்க வேண்டும்.

உங்கள் குழந்தைகள் மொபைல் போனை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகள் தவிர மற்ற நேரங்களில் குழந்தைகளை உடல் ரீதியான செயல்பாட்டில் (விளையாட்டு) பெற்றோர்கள் ஈடுபடுத்த வேண்டும்.

செல்போன் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

click me!