தம்பதிகளே உங்கள் தாம்பத்ய இன்பத்தை இரட்டிப்பாக்க இவைகளை செய்தால் போதும்!

First Published | Apr 24, 2023, 5:54 PM IST

தம்பதிகளை நெருக்கமாக இருக்க வழிவகுக்கக் கூடிய விஷயங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

Image: Getty Images

திருமண பந்தத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் உறவானது சற்று அலுத்து போய் தான் இருக்கும். குறிப்பாக தம்பதிகளின் தாம்பத்ய வாழ்க்கை என்று கூறும் போது பலரும் திருப்தி இல்லாத நிலையில் தான் இருப்பார்கள்.

இது தம்பதிகளுக்குள் காணப்படும் நெருக்கத்தை குறைத்து, மகிழ்ச்சியை பறித்து விடும். தவிர சலிப்பான உடலுறவு இருவருக்கும் இடையே இடைவெளியையும் உண்டாக்கலாம். திருமண பந்தத்தில் மசாலா மற்றும் தீப்பொறியை உயிருடன் வைத்திருக்க வேண்டியது தம்பதிகள் கவனிக்க வேண்டிய அவசியமான ஒரு விஷயமாகும்.

ஒரு உறவைத் தக்க வைத்துக் கொள்ள உடல் நெருக்கம் மிக முக்கியமாக இருக்கிறது. தம்பதிகள் அவர்களது பாலியல் வாழ்க்கையில் மறுபடியும் தீப்பொறியை கொண்டு வர அதீத முயற்சி செய்ய வேண்டும்.

அப்படியாக திருமணமான தம்பதிகள் அனைவரும் தங்கள் செக்ஸ் வாழ்க்கையில் நிச்சயமாக பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவை தம்பதிகளை மீண்டும் நெருக்கமாக இருக்க வழிவகுக்கும். அப்படியான விஷயங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

உடலுறவு வைத்துக் கொள்வதற்கான டைம் ஃபிக்ஸ் செய்ங்க!

கணவன் மனைவி இருவருக்கும் உடலுறவு கொள்ள நேரம் கிடைக்கவில்லை என நினைத்தால் உடலுறவுக்கான நேரத்தை முன் கூட்டியே பிளான் செய்து விட வேண்டும்.

இப்படி பிளான் செய்து உடலுறவு வைப்பது உங்களுக்கு சற்று வித்தியாசமாக தோன்ற வைக்கும். ஆனால் இது உங்கள் இருவருக்கும் தாம்பத்ய வாழ்க்கையில் புதுவித மசாலாவாக்க மாற்ற உதவுகிறது.

உடலுறவுக்கான நேரத்தை பிளான் செய்யும் போது இருவரது மனுமும் இதில் கவனம் செலுத்தும் தவிர பிற விஷயங்களால் தொந்தரவு ஏற்படாது. அதோடு பல புது முயற்சிகளை செயல் படுத்த முயலலாம்.

உங்கள் துணையிடம் வற்புறுத்த வேண்டாம்:

உடலுறவு என்பது நீங்கள் உங்கள் துணையை வற்புறுத்தி அல்லது துரத்தி செய்யக் கூடிய விஷயம் அல்ல. இருவரும் ஒரு மித மனத்துடன் , இருவரும் ஒரே ஆர்வமாக செயல் பட வேண்டிய விஷயம். உங்களது துணைக்கு தாம்பத்யத்தில் நாட்டம் இல்லை எனில், அவர்களாக வரும் வரை நீங்கள் பொருமையுடன் இருத்தல் அவசியமாகும்.

உங்கள் பார்ட்னருக்கும் அப்படியான இரு உணர்வும்,எண்ணமும் ஏற்படும் போது வைத்துக் கொள்ளும் உடலுறவு இரட்டிப்பான இன்பத்தை இருவருக்கும் கிடைக்கப் பெறுவீர்கள்.


போர்ஃபிளே ஃபாலோ பண்ணுங்க:

கணவன் மனைவி இருவருக்கும் பாலியல் ஊடுருவல் மட்டும் தான் இறுதி என்ற இலக்கு இருத்தல் கூடாது. ஆகையால் போர்ஃபிளே மூலம் சில சில்மிஷங்கள் செய்வது மற்றும் முத்தம் மற்றும் தொடுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

இப்படி செய்வதால் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மிக சுலபமாக அதே நேரத்தில் உற்சாகமாக்க சிறந்த வழி என்றே கூறலாம். ஏனெனில் இது உடலுறவை சலிப்பற்றதாக அதே நேரத்தில் சுவாரஸ்யமாக வைத்துக் கொள்ளும். தவிர இருவரும் ஒரே மாதிரியான உச்சக்கட்ட இன்பத்தை தரும்.

இரவு நேர டேட்டிங்களுக்கு செல்லுங்கள்:

தம்பதிகள் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையில் தீப்பொறியுடன் உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள டேட்டிங் இரவு நேர டேட்டிங்கிற்கு செல்ல வேண்டும். இது மிகவும் கவர்ச்சியான, வித்தியாசமான மற்றும் தன்னிச்சையான டேட்டிங் இரவாக அமையுமாறு செய்ய வேண்டும். இப்படியான ஒரு சூழலால் திருமண ஜோடிகள் உற்சாகமாக அதே நேரத்தில் முழு உணர்ச்சியுடன் இருப்பதை உணரலாம்.

பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்:

சில சமயங்களில் உங்கள் பார்ட்னர் அடிக்கடி உடலுறவைத் ஆரம்பிக்கவில்லை எனில், அதனை பெரிதுபடுத்தாமல் நீங்கள் பொறுப்புடன் செயலாற்றலாம். ஆக உங்கள் தூண்டுதலினால் அவர் விரைவாகவும்,நன்றாகவும் செயல்பட தொடங்கலாம். ஆகையால் சில விஷயங்களை நீங்கள் கையில் எடுத்துக் கொண்டு செயல்பட முற்படலாம். உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை மேம்படுத்த இவைகள் சிறந்த வழிகள் என்றே கூறலாம்.

ஆண்களே ! நீங்கள் இந்த மாதிரி நடந்துக்கிட்டா உங்கள் மனைவிக்கு பிடிக்காதாம்!
 

Latest Videos

click me!