நம் தினசரி வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருப்பதால், ஆரோக்கியத்தை கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். சரியான உணவு பழக்கம் இல்லாமல் இருந்தால் உடல் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. எலும்புகள், தசைகளில் வலி ஏற்படும். எலும்புகள் வலுவிழந்து போவதும் இதற்குக் காரணம். இந்த மாதிரி நேரத்தில் நாம் செய்யும் தவறுகளை கவனித்து மாற்றி கொள்ள வேண்டும்.
சோம்பேறித்தனம்:
சுறுசுறுப்பாக இல்லாமல் சோம்பேறித்தனமாக இருந்தால், போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாவிட்டால் எலும்புகள் பலவீனமடையும். நீங்கள் சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். தவறாமல் தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இப்படி செய்தால் எலும்புகள் வலுவடையும்.
அதிகமான உப்பு:
நீங்கள் உப்பு உணவுகளை அதிகம் விரும்புபவராக இருந்தால், உங்கள் எலும்புகள் பலவீனம் ஆகும். உப்பில் உள்ள சோடியத்தின் அளவு மிக அதிகம். இதன் காரணமாக உங்களுடைய கால்சியம் குறையத் தொடங்குகிறது. கால்சியம் சத்து எலும்புகளின் வலிமைக்கு முக்கிய காரணியாக உள்ளது. ஆகவே உப்பை குறைத்து கொள்ளுங்கள்.
தூக்கமின்மை:
உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்கவில்லை என்றால், அது எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் 7 முதல் 8 மணிநேரம் தூங்கவில்லை என்றால் எலும்புகள் பலவீனமாகும்.
புகைபிடித்தல்:
நம்மில் பெரும்பாலானவர்கள் தெரியும் புகைபிடித்தல் மோசமான பழக்கம். இது நுரையீரலில் பாதிப்பு உண்டாக்கும். ஆனால் அது எலும்புகளையும் பலவீனப்படுத்துகிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியாது. இன்றே புகைப்பிடிப்பதை நிறுத்திவிடுங்கள்.
வைட்டமின் டி குறைபாடு:
வீட்டிலே இருப்பதால் சூரிய ஒளி உங்கள் மீது படாது. இதனால் இயற்கையாகவே கிடைக்கக் கூடிய வைட்டமின் டி கிடைக்காமல் போய்விடும். இதன் காரணமாக எலும்புகள் ஆக பலவீனமாக மாறும். குழந்தைகளின் உடல் மீது சரியான அளவு சூரிய ஒளி படவில்லை என்றால், ரிக்கெட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும்.
இங்கு சொல்லப்பட்டுள்ள ஐந்து தவறுகளை திருத்திக் கொண்டால், உங்களுடைய எலும்புகள் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கும்.