சியா விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. குறிப்பாக இதில் நார்ச்சத்து, ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள், புரதங்கள் நிறைந்து இருக்கின்றது. எனவே எடையை குறைப்பவர்கள் முதல் உடலை ஆரோக்கியமாக வைப்பவர்கள் வரை இதை தினசரி டயட்டில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதுவும் குறிப்பாக காலை வேளையில் இதை சாப்பிடுவது ரொம்பவே நல்லதாம்.
25
water vs yogurt chia
மேலும் இதை சரியான முறையில் சாப்பிட்டால் அதிக பலனை பெறலாம். அதாவது சில சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவார்கள். இன்னும் சிலரோ தயிரில் கலந்து சாப்பிடுவார்கள். இந்த இரண்டில் எதில் சியா விதையை கலந்து சாப்பிட்டால் என்ன மாதிரியான பயனை பெறலாம்? எது அதிக நன்மை? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
35
தண்ணீரில் சியா விதைகள் ..
ஒரு கிளாஸ் தண்ணீரில் சியா விதைகளை ஊற வைத்து மறுநாள் காலை அதை குளிர்ந்த நீர் அல்லது சூடான நீரில் கலந்து குடிக்கலாம். இப்படி குடித்தால் அதில் இருக்கும் நார்ச்சத்து இரட்டிப்பாக கிடைக்கும். மேலும் போதுமான அளவு நீர்ச்சத்தும் கிடைக்கும்.
யோகர்ட்டில் ஊற வைத்த சியா விதைகளை கலந்து சாப்பிட்டு வந்தால் குடல் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமல்லாமல், குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க பெரிதும் உதவும். அதோடு யோகர்ட்டில் இருக்கும் ஆரோக்கிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்களும் கிடைக்கும். யோகர்ட்டை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு பெருங்குடல் புற்று நோய் வருவது பெருமளவில் குறைவதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.
55
எது பெஸ்ட்?
சியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்தும் குடிப்பது நன்மை பயக்கும் என்றாலும், அதை தயிருடன் கலந்து சாப்பிட்டால் நிறைய நன்மைகளை பெற முடியும்.