உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் டீ குடிக்க கூடாது என்று சொல்லப்படுகிறது. ஆனால் டீ குடிப்பதை நிறுத்தாமல் எடையை குறைப்பது சாத்தியமா? இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே நம்மில் பெரும்பாலானோர் காலை எழுந்ததும் ஒரு கப் டீயுடன் தங்களது நாளை தொடங்குகிறார்கள். காலை எழுந்ததும் டீ குடிப்பதை அவர்கள் பழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு டீ நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் டீ குடிப்பதை கைவிடுமாறு பலர் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் அது உண்மையிலேயே சரியா? இதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
25
டீ குடித்தால் எடை அதிகரிக்குமா?
உண்மையில் டீ குடிப்பது எடையை நேரடியாக பாதிக்காது. அதாவது டீ எடையை அதிகரிப்பதில்லை. பிரச்சனை என்னவென்றால் டீ தயாரிக்க பயன்படுத்தும் பால் மற்றும் அதில் சேர்க்கும் சர்க்கரை தான். ஆம் தீயில் சேர்க்கப்படும் அதிகளவிலான சர்க்கரை மற்றும் முழு கொழுப்பு உள்ள பால் தான் உடலில் கலோரி அளவு கணிச்சமாக அதிகரிக்கும். அதாவது, ஒரு கப் டீயில் 100-110 கலோரிகள் வரை இருக்கும். அதுமட்டுமின்றி டீயுடன் பிஸ்கட், வடை, பஜ்ஜி, சமோசா, பப்ஸ், ரஸ்க் போன்ற ஆரோக்கியமற்றதை சாப்பிட்டால் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.
35
டீ குடிப்பதை நிறுத்தாமல் எடை குறைக்க முடியுமா?
ஆம், டீ குடிப்பதை நிறுத்தாமல் உங்களது எடையை சுலபமாக குறைக்க முடியும். இதற்கு நீங்கள் டீ தயாரிக்கும் முறை மற்றும் அதனுடன் எடுத்துக்கொள்ளும் தின்பண்டங்களில் மாற்றங்கள் செய்தால் எடை குறைப்பது சாத்தியம். அதாவது டீயில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி அல்லது வெள்ளம் கலந்து குடிக்கலாம். முழு கொழுப்பு நிறைந்த பாலுக்கு பதில், கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் டீ போடலாம். ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை டீயுடன் சேர்த்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக மக்கானா, பொரி போன்ற சத்தான மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட தின்பண்டங்களை சாப்பிடலாம். நீங்கள் செய்யும் இந்த சிறிய மாற்றங்கள் உடலில் கலோரிகள் உட்கொள்ளலை கணிசமாக குறைத்து, எடை இழுப்புக்கு பெரிதும் உதவும்.
ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருக்க எதையும் அளவோடு எடுத்துக் கொள்வது தான் முக்கியம். இதற்கு டீயும் விதிவிலக்கல்ல. ஏனெனில் நம்மில் ஒரு சில ஒரு நாளைக்கு 5-7 முறை டீ குடிப்பார்கள். இதன் விளைவாக செரிமான அமைப்பு மற்றும் உடலில் நீச்சத்தின் சமநிலையின் மையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே ஒரு நாளைக்கு 1-2 முறை டி குடித்தால் மட்டுமே போதுமானது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நீங்கள் பால் டீ குடிப்பதற்கு பதிலாக க்ரீன் டீ, பிளாக் டீ அல்லது மூலிகை டீ போன்ற ஆரோக்கியமான டீக்களை குடிப்பதன் மூலம், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவை மிகவும் நன்மை பயக்கும்.
55
குறிப்பு :
எடையை குறைக்க டீ குடிப்பதை கைவிட வேண்டிய அவசியமில்லை. ஆனால் டீ தயாரிக்கும் விதம் மற்றும் அதனுடன் எடுத்துக் கொள்ளும் திட்பண்டங்களில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம், நீங்கள் விரும்பி குடிக்கும் டீயை தொடர்ந்து குடித்து, எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க முடியும்.