மார்பகப் புற்று நோய்க்கு சிறந்த தீர்வாக இந்த காய்கறி உதவும்..!! என்னன்னு தெரிஞ்சுக்க படிங்க..!!

First Published | May 21, 2023, 6:00 PM IST

பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை தடுக்கவும், குணப்படுத்தவும் சில காய்கறிகளில் காணப்படும் சல்பேட் என்ற கலவை உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன.

சல்ஃபோராபேன் என்பது ப்ரோக்கோலி மற்றும் பிற  காய்கறிகளில் காணப்படும் ஒரு இயற்கை தாவர கலவை ஆகும். இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. நமது உணவில் ப்ரோக்கோலியை அதிகம் சேர்த்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. ப்ரோக்கோலி மற்றும் பிற காய்கறிகளில் காணப்படும் இந்த கலவை மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை, குறிப்பாக ஆரம்ப கட்டங்களில் மெதுவாக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
 

ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் அல்லது காலே போன்ற காய்கறிகளை அதிகம் உண்ணும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இத்தகைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும் சல்ஃபோராபேன் தான் இதற்கு காரணம். இதன் மூலம் பல்வேறு வழிமுறைகள் மூலம் மார்பக புற்றுநோய் அபாயத்தை மாற்றியமைக்க முடியும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. குறிப்பாக, சல்ஃபோராபேன் ஹிஸ்டோன் டீசெடைலேஸ்கள் தடுக்கிறது. புற்றுநோயை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு இந்த உணவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

Latest Videos


தக்காளி:

தக்காளியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதனால் தினமும் சாப்பிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். தக்காளி புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவும். தக்காளியில் லைகோபீன் உள்ளது. இது ஒரு ஆக்ஸிஜனேற்ற பைட்டோ கெமிக்கல் ஆகும். இது இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது. தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. இவை அனைத்தும் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது. 

காலே:

காலே பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இது மிக மிக சுவையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், புற்று நோயை எதிர்த்துப் போராடவும், நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
 

முட்டைக்கோஸ்:

பலருக்கு முட்டைகோஸ் சாப்பிட பிடிக்காது. ஏனென்றால் அது அவ்வளவு சுவையாக இல்லை. ஆனால் முட்டைக்கோஸ் நம் உடலில் உள்ள புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. முட்டைக்கோஸ் மார்பக புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.

click me!