தூங்க போறதுக்கு முன் இந்த 4 பொருளை சாப்பிட்டு பாருங்க..நல்ல தூக்கம் வரும்.. தைராய்டு பிரச்சனை கிட்ட கூட வராது

First Published | Feb 20, 2023, 7:18 PM IST

Thyroid Superfoods: தைராய்டு பிரச்சனையை கட்டுக்குள் வைத்து நல்ல தூக்கத்தை பெற இயற்கை வைத்தியம்.. 

நாம் இரவில் ஆழ்ந்து உறங்க முடியாமல் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட சில காரணங்கள் உள்ளன. அந்த பிரச்சனையில் தைராய்டும் உண்டு. நமது தொண்டையில் இருக்கும் தைராய்டு சுரப்பி அதிகமா சுரந்தாலும் சரி குறைவாக சுரந்தாலும் சரி பிரச்சனை தான். இதனை ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என இருவகையாக பிரிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் தைராய்டு பிரச்சனையால் தான் தூக்கமில்லாமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் சில உணவுகளை இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிபுணர் லவ்னீத் பத்ரா பரிந்துரைக்கிறார்.  

பூசணி விதைகள் 

பூசணி விதைகளில் ஜிங்க் அதிகம் காணப்படுகிறது. இந்த சத்து தைராய்டு ஹார்மோன் சீராக சுரக்க உதவுகிறது. பூசணி விதையில் டிரிப்டோபான் எனும் இயற்கையான அமினோ அமிலங்கள் மிகுந்துள்ளன. இவை தூக்கத்தைத் தூண்ட உதவும். இவற்றோடு தாமிரம், செலினியம் போன்றவை கூட மிகுந்துள்ளன. இதுவும் தூக்கத்தை நல்கும். தினமும் இரவில் தூங்கும் முன் வறுத்த பூசணி விதைகளை கொஞ்சம் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். 

Tap to resize

முந்திரி பருப்பு 

முந்திரி பருப்பில் காணப்படும் செலீனியம் தைராய்டு சரப்பிகளைத் தூண்டி, அதன் சுரப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி உடலின் செயல்பாடும் சீராக இருக்க உதவுகிறது. நான்கு முதல் ஐந்து முந்திரி பருப்புகளை ஊற வைத்து இரவில் உண்பதால் தூக்கம் நன்றாக வரும். தைராய்டு சுரப்பையும் சரி செய்யலாம். 

இதையும் படிங்க: அடிக்கடி தூக்க மாத்திரை போடுவதால்... உடலுக்கு வரும் பக்க விளைவுகள் எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?

தேங்காய் 

தேங்காயை சமைத்து உண்டால் டிரான்ஸ் ஃபேட் அதிகமாகும். பச்சை தேங்காயாக அப்படியே உண்ணும்போது டிரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக இருப்பதில்லை. தினமும் கொஞ்சம் தேங்காய் துண்டுகளை சமைக்காமல் உண்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். அத்துடன் தைராய்டு பிரச்சனை கூட கட்டுப்பாட்டுக்குள் வரும். தூங்கச் செல்லும் முன்னர் தேங்காயை கொஞ்சம் உண்ண நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர். 

சியா விதைகள் 

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட சியா விதைகள், அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. இவற்றை ஊறவைத்து உண்பதால் தைராய்டு சுரப்பியில் உள்ள அழற்சி குணமாகும். இதனை நீரில் ஊற வைத்து தினமும் இரவில் தூங்கும் முன் 1 ஸ்பூன் அளவு உண்ணலாம். தைராய்டு சுரப்பு கட்டுக்குள் வரும். நல்ல தூக்கம் கிடைக்கும். இந்த இயற்கை உணவை உண்பது நல்ல பலனை தரும். தைராய்டுக்கு தினமும் காலையில் மாத்திரை உண்பவர்கள் அதை தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும். அது முக்கியம். மாத்திரை உண்பதை உங்கள் விருப்பத்திற்கு கைவிடுவது கெட்ட பலன்களை தரும். 

இதையும் படிங்க: கருத்து போன கழுத்து, கை, கால்கள் கூட.. வெறும் 5 நிமிடங்களில் வெள்ளையா மாற.. இந்த ஒரு அற்புத பொருள் போதும்..

Latest Videos

click me!