ஆன்லைன் காதல்.. உஷார்! உல்லாசமாக இருக்க நினைத்து.. வாழ்வை இழந்தவர்களின் நெஞ்சை உலுக்கும் நிஜ கதைகள்...

First Published | Feb 20, 2023, 5:51 PM IST

ஆன்லைன் டேட்டிங் செயலிகள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களின் உண்மை கதை.. 

நிஜ வாழ்க்கையில் அன்பை பெற முடியாத சிலர் ஆன்லைனில் அன்பைக் கண்டறிய முயலுகின்றனர். ஆன்லைன் டேட்டிங்கில் எதுவும் எளிமையானது அல்ல. சில முடிவுகள் உங்களை நடுங்கச் செய்யும் அளவுக்கு குழப்பமாகவும் இருண்மையாகவும் உள்ளது. போதைப்பொருளில் இருந்து கொலை செய்வது வரை ஆன்லைன் டேட்டிங்கில் குற்றங்கள் நிகழுகின்றன. சிலரின் உண்மையான கதைகளை தெரிந்து கொண்டால் உங்கள் இதயம் படபடக்கும். 

ஓய்வுபெற்ற விமானப்படை விங் கமாண்டரின் மனைவி தான் மீனு ஜெயின். இவர் டேட்டிங் செயலியில் தினேஷ் தீட்சித் என்பவர் மீது காதல் கொண்டுள்ளார். இவர்கள் 6 மாதங்களாக வாட்ஸ் அப்பில் காதல் லீலைகளில் இருந்துள்ளனர். இறுதியாக இவர்கள் சந்தித்தபோது, ​​தீக்ஷித் தன் தந்திரத்தால், மீனுவிடமிருந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நகைகளை அபேஸ் செய்துள்ளார். அது மட்டுமில்லாமல் அதன் பிறகு மீனு கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக தான் மீட்கப்பட்டார். விசாரணை செய்ததில் காதல் விவகாரம் தெரிய வந்துள்ளது. இந்த விசாரணையில் தீட்சித் ஒரு குறிப்பிட்ட ஐபிஎல் போட்டியில் பணத்தை சூதாடி கடனில் மூழ்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்திற்காக அரங்கேறிய உண்மையான நாடக காதல்.. இதுதான். 

Tap to resize

மும்பையை சேர்ந்த இருவர் ஆன்லைனில் ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் தான் ஷ்ரத்தா வால்கர்,  அஃப்தாப் பூனாவாலா.அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்ட ஈர்ப்பால் லிவ்-இன் ரிலேஷன்சிப்பை தேர்வு செய்துள்ளனர். பெண்ணின் குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு. இருவரும் டெல்லிக்கு சென்று வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். ஆசையும், மோகமும் முடிந்த பிறகு அந்த பையன் தன் துணையை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணின் உடலை ரம்பத்தால் வெட்டி பைகளில் போட்டு வெவ்வேறு இடங்களில் வீசியிருக்கிறார் என போலீஸ் அறிக்கைகள் கூறுகின்றன. ஆன்லைனில் ஒருவரின் உண்மையான முகம் வெளிப்படுவதில்லை. முழுவதும் தெரிந்து கொள்ளாமல் யாருடனும் உறவை தொடங்குவது சிக்கலை ஏற்படுத்தலாம். 

கிட்டத்தட்ட 41 வயதான திருமணமான பேங்க் ஆபிசர் ஒருவர் ஆன்லைனில் அழகான பெண்களுடன் கொஞ்சி குலாவ முயன்றபோது 12 லட்ச ரூபாயை இழந்தார். ஆன்லைன் டேட்டிங் என்ற விளம்பரத்தைக் கிளிக் செய்த ​அவருக்கு 12.55 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் விளம்பரத்தை கிளிக்.. பிறகு தனி விவரங்களை கொடுத்துள்ளார். பின் ஒரு மோசடி கும்பலிடம் வசமாக சிக்கி பணத்தை பறி கொடுத்துள்ளார். ஒரே ஒரு விளம்பரம் தான்.. உல்லாச ஆசையில் லட்சங்கள் பறிபோனது. 

இதையும் படிங்க: ஒருவர் மீது பாலியல் ஈர்ப்பு வர இப்படி கூட காரணம் இருக்குமா?

ஜெய்ப்பூரைச் சேர்ந்த கட்டுமானத் துறையில் ஒரு சாதாரண இடைத்தரகர் தான் துஷ்யந்த் ஷர்மா (27). இவர் டிண்டர் ஆப்பில் பிரியா சேத் என்ற பெண்ணைச் சந்தித்தார். அப்போது தன்னை ரூ. 25 கோடி வருமானம் கொண்ட ஒரு நிறுவனத்தின் தலைவர் என பொய்யாக அறிமுகம் செய்துள்ளார். இது முழுக்க பொய் என்பது பிரியாவுக்கு அப்போது தெரியவில்லை. 2018 ஆம் ஆண்டு பிரியாவை தனது பிளாட்டில் சந்திக்கும்படி துஷ்யந்த் கேட்டுக் கொண்டார். அந்த சந்திப்பில் பிரியாவும், அவளுடைய இரண்டு நண்பர்களும் துஷ்யந்துக்கு கோகோயின் போதைப்பொருள் கொடுத்தனர்.

அப்போது அவரிடம் பணம் கேட்டு மிரட்டப்பட்டது. தான் பண்க்காரர் அல்ல என்ற உண்மையை துஷ்யந்த் சொல்லவும், பிரியா உள்பட மூவரும் விரக்தியடைந்தனர். தொடர்ந்து துஷ்யந்த் அப்பாவிற்கு அழைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணத்தை பெற்றதும் இரக்கமே இல்லாமல் துஷ்யந்தை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் போட்டு டெல்லி-ஜெய்ப்பூர் விரைவுச்சாலையில் வீசியுள்ளனர். ஆன்லைன் டேட்டிங்கில் எல்லோருக்கும் நல்ல காதல்கள் அமைவதில்லை. மக்களே உஷார்!! 

இதையும் படிங்க: ஆலியாவுக்கு இந்த பொசிஷன் தான் புடிக்கும்.. வெட்கமே இல்லாமல் பெட் ரூம்ல நடக்குறத சொன்ன ரன்பீர் கபூர்

Latest Videos

click me!