
மன ஆரோக்கியம் அல்லது நினைவாற்றல் அதிகரிப்பதற்கு பாதாம் சாப்பிடுங்கள் நல்ல விளைவை கொடுக்கும் என்று அடிக்கடி கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஊறவைத்த பாதாம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயருக்கும். முக்கியமாக, குளிர்காலத்தில் தேனில் ஊற வைத்த பாதாம் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம். இது இதயம் முதல் மூளை வரை உள்ளிட்ட ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது. இதனால் உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கிறது. இப்போது தேனில் ஊற வைத்த பாதாமை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பாதாமில் பல வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. அதுவே ஊறவைத்த பாதாமில் ஊட்டச்சத்துக்கள் இரண்டு மடங்காக மாறுகிறது. ஏனெனில் ஊற வைக்கும்போது என்சைம்களை செயல்படுத்துகிறது மற்றும் டானின்கள் போன்ற ஆன்டிநியூட்ரின்களை குறைக்கும். ஊறவைத்த பாத்தாமல் மெக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்திருக்கும். இவை மூளை, இதயம் மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கூடுதலாக ஊறவைத்த பாதாமில் புரத நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றம் உள்ளன. இவை ஆற்றல் மற்றும் சிறந்த செரிமானத்திற்காக உதவுகிறது.
தேனில் ஆக்சிஜனேற்றிகள், வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தேனில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் காயங்கள் குணப்படுத்துவதற்கும், ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
மூளைக்கு நல்லது: பாதாமில் இருக்கும் வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. அதுபோல தேனில் இருக்கும் இயற்கை சர்க்கரை முளைக்கு ஆற்றலை அளிக்கிறது. எனவே, இவை இரண்டையும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டால் மூளை நரம்புகள் வலுப்பெறும். இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும். தேனில் ஊற வைத்த பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சில வாரங்களிலேயே உங்கள் நினைவாற்றல் கூர்மையாவதை உணரலாம்.
இதயத்திற்கு நல்லது: தேனில் ஊற வைத்த பாதாமில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு ரொம்பவே நல்லது. தேனில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய தமனிகளில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, இதய நோய் அபாயத்தை குறைக்கும். எனவே தேனில் ஊற வைத்த பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு இதய ஆரோக்கியம் மேம்படும்.
பாதாமில் இருக்கும் நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக செயல்பட பெரிதும் உதவுகிறது. தேனில் இயற்கையாகவே என்சைம்கள் உள்ளன. இது செரிமானத்தை எளிதாக்கும். எனவே தேனில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வந்தால் செரிமானம் அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
தேனில் ஆன்டி-பாக்டரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் பண்புகள் உள்ளன. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதுபோல பாதாமில் இருக்கும் சத்துக்களும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். எனவே தேனில் ஊற வைத்த பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமலிலிருந்து நிவாரணம் அளிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்யும்.
பாதாமில் இருக்கும் வைட்டமின் ஈ, தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்பாக மாறும் மற்றும் முடி அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
எடையை குறைக்கும்:
தேனில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வந்தால் செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வளர்ச்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளை நீக்கி உடலில் இருக்கும் கூடுதல் காலோரிகள எரிக்க உதவுகிறது. இதனால் எடையை சுலபமாக குறைத்து விடலாம்.
இதையும் படிங்க: யாரெல்லாலாம் பாதாம் சாப்பிடக் கூடாது? சாப்பிட்டால் என்ன ஆகும்?
vமேலே சொன்ன அனைத்து நன்மைகளையும் பெற விரும்பினால், நீங்கள் இரவு தூங்கும் முன் இரண்டு ஸ்பூன் தேனில் 4-5 பாதாமை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: பாதாமை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் தெரியுமா..??