Benefits of Avoiding Junk Food in Tamil : 60 நாட்களுக்கு கூல்டிரிங்க்ஸ், மசாலா உணவுகள், நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகளை நிறுத்திப் பாருங்கள். உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை நீங்களே பார்ப்பீர்கள்.
இப்போதெல்லாம் பசித்தால் போதும், உடனே ஜங்க் ஃபுட் பக்கம் தான் ஓடுகிறோம். சூடான நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ், சிக்கன் பர்கர், பீட்சா, கூல்டிரிங்க்ஸ் என எதையாவது சாப்பிடுகிறோம். இப்படி இன்றைய இளைஞர்கள் ஜங்க் ஃபுட்டுக்கு அடிமையாகிவிட்டனர். இது வயிற்றை நிரப்புவது போல தெரிந்தாலும், நம் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். அதனால், ஒரு 60 நாட்களுக்கு ஜங்க் ஃபுட்டை முழுமையாக தவிர்த்துப் பாருங்கள். உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே கவனிக்கலாம்.
25
ஜங்க் ஃபுட் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (National Institute of Health) ஒரு ஆய்வை நடத்தியது. அதன்படி, ஜங்க் ஃபுட்டில் கலோரிகள் அதிகமாக இருந்தாலும், அதிகம் பதப்படுத்தப்பட்ட இந்த உணவுகள் உடலுக்குக் கெடுதல்தான் செய்யும். உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும். ஜங்க் ஃபுட், மக்களிடம் மேலும் சாப்பிட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டும். இதனால் அதிகமாக சாப்பிடுவார்கள். 60 நாட்கள் இதுபோன்ற உணவுகளைத் தவிர்ப்பதால், லெப்டின் மற்றும் கிரெலின் போன்ற பசி ஹார்மோன்கள் ரீசெட் ஆகும். இது, வயிறு சீக்கிரம் நிரம்பிய உணர்வைக் கொடுத்து, ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை அதிகரிக்கும்.
35
வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சி
'ஒபிசிட்டி சயின்ஸ் அண்ட் பிராக்டிஸ்' (Obesity Science and Practice) இதழில் வெளியான ஒரு ஆய்வின்படி, ஜங்க் ஃபுட் அதிகம் சாப்பிடுபவர்களை விட, குறைவாகச் சாப்பிடுபவர்கள் குறைவான கலோரிகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால், அவர்கள் உடல் எடை கூடுவதில்லை. 60 நாட்கள் ஜங்க் ஃபுட்டைத் தவிர்த்தால், உடலில் உள்ள கொழுப்பு கரையும். ரத்த சர்க்கரை அளவு குறையும். நாள் முழுவதும் நீங்கள் ஆற்றலுடனும், ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். குடல் பிரச்சினைகளும் சரியாகும். வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியும் மேம்படும்.
ஒரு மாதம் முடிந்ததும் மாற்றங்களை நீங்களே கண்ணாடியில் பார்க்கலாம். எண்ணெய்ப் பசை மற்றும் பருக்கள் குறைந்து, சருமம் இயற்கையாகவே ஜொலிக்க ஆரம்பிக்கும். நெஞ்செரிச்சல், கேஸ் தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் மாயமாய் மறைந்துவிடும். இரவில் சீக்கிரம் தூக்கம் வரும், காலையில் எழும்போது உடல் லேசாக இருக்கும். இரண்டு மாதங்கள் முடியும் போது உங்கள் உடல் ஒரு புதிய நிலையை எட்டும். தேவையற்ற கொழுப்புகள் (குறிப்பாக வயிற்றுப் பகுதி) குறைந்து, உடல் கட்டுக்கோப்பாகும். கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) குறைந்து, இரத்த அழுத்தம் சீராகும். மூளை சுறுசுறுப்பாகும், ஞாபக சக்தி மற்றும் கவனிப்புத் திறன் அதிகரிக்கும்.
55
இரண்டு மாதங்களுக்கு ஜங்க் ஃபுட்டைத் தவிர்த்துப் பாருங்கள்
2026-ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஜங்க் ஃபுட்டைத் தவிர்ப்பதால் தினசரி எடுத்துக் கொள்ளும் கலோரிகளில் 15% வரை குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், உங்கள் உடல் எடை இயல்பாகவே குறையும். பழங்கள், காய்கறிகளுடன் வீட்டில் சமைத்த உணவை மட்டுமே சாப்பிடுவதால், பலவிதமான நோய்கள் வரும் அபாயமும் குறையும். ஒரு இரண்டு மாதங்களுக்கு ஜங்க் ஃபுட்டைத் தவிர்த்துப் பாருங்கள், அதன் பலன்களை நீங்களே உணர்வீர்கள். உங்களிடமே ஒரு பெரிய மாற்றம் தெரியும்.