குழந்தைகளுக்கு கற்றாழை பயன்படுத்தி இத்தனை விஷயம் பண்ணலாம்... டயப்பர் போடுற குழந்தைகளுக்கு இத்தனை நன்மைகளா!!

First Published Jun 29, 2023, 3:06 PM IST

கற்றாழை குழந்தைகளின் சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

கற்றாழையை பொதுவாக சரும பிரச்சினைக்கு பயன்படுத்துவார்கள். நீரிழிவு நோய், மலச்சிக்கல், முகப்பரு மற்றும் சுருக்கங்களுக்கு சிகிச்சையளிக்கக் கற்றாழை பயன்படுகிறது. இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம். ஒரு ஆய்வின்படி, கற்றாழையில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை குழந்தையின் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என தெரியவந்துள்ளது.  

கற்றாழையில் உள்ள சத்துக்கள்: 

வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம், கோலின், தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் கற்றாழையில் காணப்படுகின்றன. இது தவிர, கால்சியம், மெக்னீசியம், ஜிங்க் குரோமியம், செலினியம், சோடியம், இரும்பு, பொட்டாசியம் போன்ற பல தாதுக்களும் இதில் காணப்படுகின்றன. 

குழந்தையின் தலைமுடி: 

கற்றாழை ஜெல்லை குழந்தையின் முடி மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்வதால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். இது தவிர, குழந்தைகளுக்கு தலையில் அரிப்பு, சொறி மற்றும் முடி குறைவாக இருந்தால், கற்றாழை ஜெல்லை வாரம் இருமுறை தடவலாம். 

டயபரால் ஏற்படும் அரிப்பை நீக்கும்: 

குழந்தைகள் பல மணிநேரங்களாக டயப்பர்களை அணிவதால் சொறி ஏற்படலாம். இது தவிர, சொறி, வீக்கம், அரிப்பு போன்ற பிரச்சனைகளும் வரும். இந்த அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் பெற கற்றாழையின் ஜெல் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கற்றாழை ஜெல்லைக் கொண்டு குழந்தையின் தோலை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது மசாஜ் செய்து வந்தால் சொறியைப் போக்கலாம்.

சருமம் ஈரப்பதமாக இருக்கும்! 

ஆராய்ச்சியின் படி, கற்றாழை ஜெல் மூலம் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது அவர்களின் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. தினசரி எண்ணெய் மசாஜ் செய்வதால், குழந்தையின் தோல் கருப்பாக மாறத் தொடங்குகிறது, அத்தகைய சூழ்நிலையில், கற்றாழை ஜெல் அவர்களின் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் உங்கள் குழந்தை 6 மாதங்களுக்கும் குறைவாக இருந்தால் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்த வேண்டாம். 

நோய் எதிர்ப்பு சக்தி: 

கற்றாழை சாறு குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

செரிமான பிரச்சனைகளை நீக்கும்: 

குழந்தைகள் பெரும்பாலும் மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் வாயு போன்ற செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நேரத்தில் கற்றாழை சாற்றை கொடுக்கலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 

ஆனாலும் எந்த வயதில் குழந்தைகளுக்கு கற்றாழை சாறு கொடுக்க வேண்டும் என்பது எந்த ஆராய்ச்சியிலும் வெளிவரவில்லை. ஆகவே குழந்தைக்கு நீங்கள் கற்றாழை சாற்றைக் கொடுக்கும் முன்பு மருத்துவ நிபுணரிடம் கேட்கவும். இது தவிர வீட்டில் வளர்ந்த கற்றாழை சாற்றை மட்டும் குழந்தைக்கு கொடுக்கவும். சந்தையில் நீங்கள் வாங்கும் கற்றாழை சாறு குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். 

click me!