Plastic box: பிளாஸ்டிக் டப்பாவில் உணவை சேமிப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆனால், அனைத்து பிளாஸ்டிக் டப்பாக்களும் உணவு சேமிப்பதற்கு ஏற்றவையா? பிளாஸ்டிக் டப்பாவைத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டியவை என்ன என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
இன்றைய காலத்தில் வீட்டில் உணவைச் சேமிக்கவும், பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு உணவை எடுத்துச் செல்லவும் பிளாஸ்டிக் டப்பாக்களைப் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. ஆனால், எல்லா பிளாஸ்டிக் டப்பாக்களும் உணவை வைக்க ஏற்றவை அல்ல. குறிப்பாக, சூடான உணவை பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைக்கும்போது, அந்த டப்பா உணவுப் பயன்பாட்டுக்கு ஏற்றதா? என்பதை கவனிப்பது அவசியம்.
26
இந்த Symbol இருந்தால் மட்டுமே பிளாஸ்டிக் டப்பாவை வாங்குங்க
பிளாஸ்டிக் டப்பாவில் உணவு வைப்பது முழுமையாக ஆபத்தானது என்று சொல்ல முடியாது. உணவை வைப்பதற்காக பிளாஸ்டிக் டப்பாவை வாங்கும்போது, அதில் “Food Grade” அல்லது “Food Contact Use” என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். இத்தகைய டப்பாக்கள் உணவுக்கு பயன்படுத்துவதற்காகவே தயாரிக்கப்பட்டவை.
இந்தியாவின் Food Safety and Standards Authority of India (FSSAI) விதிகளிலும், உணவு சேமிப்பு மற்றும் பேக்கிங்கில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உரிய இந்திய தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, டப்பா உணவு வைக்க ஏற்றதா? அதன் தரம் என்னன்னு சரியா தெரியாத பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவு வைப்பதை தவிர்ப்பது நல்லது.
36
சூடான உணவை உடனே பிளாஸ்டிக் டப்பாவில் வைக்கலாமா?
சூடான உணவை பிளாஸ்டிக் டப்பாவில் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அதிக வெப்பநிலையில் பிளாஸ்டிக்கில் உள்ள சில வேதிப்பொருட்கள் உணவுக்குள் கலக்கும் வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வை Food contact materials (FCMs) தொடர்பான ஆய்வில், migration என குறிப்பிடுகின்றனர்.
Microwave-ல் பயன்படுத்த வேண்டுமென்றால், “Microwave-safe” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள பிளாஸ்டிக் டப்பாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எல்லா பிளாஸ்டிக் டப்பாக்களும் Microwave பயன்பாட்டுக்கு ஏற்றவை அல்ல.
முக்கியமாக, சில பிளாஸ்டிக் டப்பாக்கள் உணவை சூடாக்கும்போது உருவாகும் அதிக வெப்பத்தால் உருகக்கூடும் என்பதால் அவற்றை microwave-ல் பயன்படுத்தக்கூடாது என Food and Drug Administration - FDA குறிப்பிடுகிறது.
56
பழைய அல்லது சேதமடைந்த டப்பாக்களை பயன்படுத்தலாம?
பிளாஸ்டிக் டப்பாவில் கீறல்கள், விரிசல்கள், நிறமாற்றம் அல்லது வடிவ மாற்றம் ஏற்பட்டிருந்தால், அதை பயன்படுத்தாமல் மாற்றுவது நல்லது. குறிப்பாக, அதிகமாக சேதமடைந்த டப்பாக்களை நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்ப்பது பாதுகாப்பானதாகும்.
66
இறுதி முடிவு
முக்கியமாக, பிளாஸ்டிக் டப்பாவில் உணவு வைத்தாலே உடலுக்கு தீங்கு என்று பொதுவாகக் கூறுவது சரியானதல்ல. உணவு வைக்க ஏற்ற தரமான (food-contact) டப்பாவைத் தேர்வு செய்து, அதற்கான பயன்பாட்டு வரம்புகளுக்குள் பயன்படுத்துவதுதான் முக்கியம்.
அதேநேரத்தில் உணவில் கலக்கக்கூடிய சில வேதிப்பொருட்களும் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், உணவைச் சேமிக்கும் போது பாத்திரம் சரியான தரத்தில் உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும் என்று WHO அறிவுறுத்துகிறது.