AC Side Effects : 24 மணி நேரமும் ஏசி அறையா? உடலில் ஏற்படும் இந்த மாற்றங்கள் தெரியுமா?

Published : Aug 26, 2026, 11:01 AM IST

Side Effects of Air Conditioners: இன்றைய காலகட்டத்தில் அலுவலகம், வீடு, கார் என பெரும்பாலானோர் நாள் முழுவதும் ஏசி அறைகளிலேயே அதிக நேரம் செலவிடுகின்றனர். இவ்வாறு நீண்ட நேரம் ஏசியில் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

PREV
14
நாள் முழுவதும் ஏசி அறையா?

நாள் முழுவதும் ஏசி அறையில் இருப்பது உடலுக்க குளிர்ச்சியாகவும், வசதியாகவும் இருக்கும். ஆனால் நீண்ட நேரம் ஏசியில் இருந்தால் தோல் வறட்சி, கண் எரிச்சல், மூக்கு மற்றும் தொண்டை வறண்டு போவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

24
தோல் மற்றும் கண் பாதிப்புகள்

நீண்ட நேரம் ஏசி ரூமில் இருப்பதால், அறையின் ஈரப்பதம் குறைந்து தோல் வறட்சி, உதடு வெடிப்பு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதேபோல், சிலருக்கு கண்களில் எரிச்சல், தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகளும் தோன்றலாம்.

சுவாச மண்டலத்தில் பாதிப்பு

ஆஸ்துமா அல்லது ஏற்கனவே நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று கூடுதல் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் சுவாசப் பிரச்சினைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக நுரையீரல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

34
தலைவலி, சோர்வு ஏற்படும் வாய்ப்பு

நாள் முழுவதும் ஏசி அறையில் இருப்பவர்களுக்கு "சிக் பில்டிங் சிண்ட்ரோம்" (Sick Building Syndrome) எனும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் அறிகுறியாக சிலருக்கு தலைவலி, சோர்வு மற்றும் குறிப்பிட்ட செயலில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.

44
தடுப்பு வழிமுறைகள்

ஏசியின் ஃபில்டர் சரியாக பராமரிக்கப்படாவிட்டால் தூசி காற்றில் பரவி சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

தடுப்பு வழிமுறைகள்

ஏசி பயன்படுத்துவது உடல்நலத்திற்கு கேடு என்று சொல்ல முடியாது. ஆனால்,

  • உடலுக்கு ஏற்ற சரியான ஏசி வெப்பநிலையை வைத்திருக்க வேண்டும்.
  • ஏசி ஃபில்டர்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.
  • உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது.
  • ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் 10-15 நிமிடம் வெளியே சென்று வருவது போன்றவை இந்த பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாக்க உதவும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது.
Read more Photos on
click me!

Recommended Stories