மாரடைப்பு வரப்போவதை கண்களை பார்த்தே கண்டுபிடிக்கலாம்.. இதோ 5 முக்கிய அறிகுறிகள்..!

First Published Jun 7, 2023, 10:15 AM IST

மாரடைப்பு ஏற்பட போவதை முன்கூட்டியே கண்களில் வெளிப்படும் முக்கிய அறிகுகளால் கண்டறியலாம். 

இப்போது மாறிப்போன வாழ்க்கை முறை, உணவு பழக்கத்தால் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்படுவதால் சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க நேரிடுகிறது. இந்த மாதிரி இதய பிரச்சனையில் முன்கூட்டியே நம் உடல் சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். இதய ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனை இருப்பதை விரிவான கண் பரிசோதனை மூலமும் கண்டறியலாம். வழக்கமான கண் பரிசோதனை செய்துகொள்வது உங்கள் உடல்நலம், குறிப்பாக இதய ஆரோக்கியம் பற்றிய பல புரிதல்களுக்கு வழிவகுக்கும்.

விழித்திரை வாஸ்குலேச்சர் என்று அழைக்கப்படும் கண்ணின் பின்புறத்தில் உள்ள இரத்த நாளங்களின் அமைப்பு இதயத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. நம்முடைய கண்ணில் ஏதேனும் சிக்கல் இருந்தால், இது வரவிருக்கும் இதய நோய்களுடன் நேரடியாக இணைக்கப்படலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

பல ஆய்வுகளின் முடிவுகளின்படி இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழித்திரைகள் கண் பக்கவாதம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் கண்ணுக்கு இரத்த ஓட்டம், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் செல்கள் இறக்கின்றன. பக்கவாதம் தவிர, கண் ஸ்கேன் மூலம் அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நோய்களின் அறிகுறிகளையும் கண்டறிய முடியும். 

மாரடைப்புக்கான கண் சார்ந்த அறிகுறிகள்:  

உங்களுக்கு மாரடைப்பு அல்லது அது தொடர்பான வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால், கண்களில் பல அறிகுறிகளும் உருவாகும்.  

பார்வையிழப்பு: 

இது மாரடைப்பின் மிகவும் அசாதாரண அறிகுறிகளில் ஒன்றாகும். உங்களுடைய ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் முழு அல்லது பகுதியளவு தற்காலிக பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, உங்கள் இதயம் சரியாக செயல்படாதபோது, விழித்திரையின் மையப் பகுதியின் கீழ் மஞ்சள் படிவுகள் போன்ற பல மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்கள் குவிய, விழித்திரை இஸ்கெமியாவை ஏற்படுத்துகின்றன. 

ரத்த ஓட்டம் தடைபடுதல்: 

கண்களுக்கு இரத்தத்தை வழங்கும் மைய விழித்திரை தமனியில் இரத்த ஓட்டம் தடுக்கப்படும்போது அமுரோசிஸ் ஃபுகாக்ஸ் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அமுரோசிஸ் ஃபுகாக்ஸின் பொதுவான காரணங்களில் ஒன்று பிளேக் அல்லது இரத்தக் கட்டியிலிருந்து கண்ணுக்கு இரத்த ஓட்டம் தடைபடுவதாகும்.

வளையம்: 

கார்னியாவைச் சுற்றி ஒரு வளையம் உருவாகுகிறது. இது பெரும்பாலும் மாரடைப்புக்கு முன்பே கவனிக்கப்படுகிறது. இந்த வளையங்கள் தெளிவான கார்னியாவின் விளிம்புகளிலும், கண்மணியின் மேல் வட்டமான திசு மற்றும் கருவிழியிலும் உருவாகின்றன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

இதையும் படிங்க: தொப்புளில் ஒரு துளி எண்ணெய் வைத்தால் இவ்வளவு நன்மைகளா??

விழித்திரையின் நிறத்தில் மாற்றம்: 

​​உங்கள் பார்வையில் திடீர் மாற்றம் ஏற்படலாம். உங்கள் இதயம் சரியாக செயல்படாதபோது, உங்கள் பார்வையில் திடீர் மாற்றம் ஏற்படலாம், இது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். நேஷனல் ஸ்ட்ரோக் அசோசியேஷன், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நபர்களுக்கு சில வகையான பார்வை மாற்றம் உள்ளது. இது மூளையின் ஒரு பகுதியை சேதப்படுத்தும். இதன் விளைவாக, பார்வை குறைபாடு, குருட்டுத்தன்மை போன்ற காட்சிப் புலனுணர்வுச் சிக்கல்கள் ஏற்படலாம்.

விழித்திரை விறைப்பு: 

ஆய்வுகளின்படி, மாரடைப்பு ஏற்படும் போது விழித்திரையில் உள்ள இரத்த நாளங்கள் விறைப்பாகவும் கடினமாகவும் மாறும். ரெட்டினல் தமனிகளுக்கும் நரம்புகளுக்கும் இடையே உள்ள விகிதம் தோராயமாக இரண்டு முதல் மூன்று வரை இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் தமனி நரம்பைக் காட்டிலும் சிறியதாக இருந்தால், அல்லது நரம்பு மிகவும் பெரியதாகவும் விரிந்ததாகவும் இருந்தால், அது மாரடைப்புக்கான சான்றாக இருக்கலாம்.

சேதமடைந்த இரத்த நாளங்கள்:

ஒரு கண் பரிசோதனையின் போது, ​​மருத்துவர் உங்கள் இரத்த நாளங்களில் ஏதேனும் பிரச்சனை அல்லது சிறிய சேதத்தை உறுதி செய்தால் உடனடியாக உங்கள் இதயத்தையும் பரிசோதித்து விடுங்கள். 

இதையும் படிங்க: காலை எழுந்ததும் சூரிய நமஸ்காரம் கட்டாயம் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

click me!