Kids Mental Wellnes: குழந்தைகளுக்கான யோகா.! இனி மொபைல் போன் பக்கமே குட்டீஸ் போகமாட்டாங்க

Published : Aug 25, 2026, 10:25 AM IST

படிப்பு அழுத்தம், மொபைல் கேம் மோகம், தனிமை - சிறுவயதிலேயே மன அழுத்தம், மனச்சோர்வு அதிகமாகுது. குழந்தைகளுக்கு மருந்து தேவையில்லை, தினமும் 15 நிமிஷம் செய்யக்கூடிய 5 எளிய யோகாசனங்களே அவங்க மனசை சந்தோஷமா வைக்க சிறந்த வழி என்கிறார் நிபுணர்கள்.

PREV
15
பாலாசனம்: மன அழுத்தத்தைக் குறைத்து, குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணர்வை அளிக்கும் எளிய ஆசனம்.
குழந்தைகள் பயப்படும்போது சுருண்டு படுப்பதை போன்ற இந்த ஆசனம், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, நல்ல உறக்கத்திற்கு உதவுகிறது. இரவில் செய்தால் மன அமைதி கிடைக்கும்.
25
புஜங்காசனம்: குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரித்து, கூன் விழுந்த உடலை நேராக்க உதவும் நாகப்பாம்பு போன்ற ஆசனம்.
இந்த ஆசனம் நுரையீரலுக்கு அதிக ஆக்சிஜனை கொண்டு சென்று, முதுகுத்தண்டை வலுவாக்குகிறது. தாழ்வு மனப்பான்மையைக் குறைத்து, மனதை உற்சாகமாக மாற்றுகிறது.
35
விருட்சாசனம்: மொபைல் போதை மற்றும் கவனக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனதை ஒருமுகப்படுத்த உதவும் மரத்தைப் போன்ற நிலை.
ஒரு காலில் நின்று சமநிலைப்படுத்துவதால், குழந்தைகளின் கவனம் சிதறாமல் ஒரே இடத்தில் நிலைக்கிறது. இது பொறுமையையும், படிப்பில் ஆர்வத்தையும் அதிகரிக்கிறது.
45
மர்ஜரியாசனம்: குழந்தைகளின் கோபம், பிடிவாதம் மற்றும் செரிமான பிரச்சனைகளைக் குறைக்க உதவும் பூனை-பசு நிலை ஆசனம்.
இந்த ஆசனம் முதுகுத்தண்டில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்கிறது. வயிறு சுத்தமாக இருந்தால், மனமும் தெளிவாக இருக்கும்.
55
சவாசனம் & பிராமரி: ஆழ்ந்த உறக்கத்திற்கும், மன அமைதிக்கும் உதவும் இறுதி நிலை ஆசனமும், வண்டு போன்ற ஒலி எழுப்பும் பிராணாயாமமும்.

சவாசனம் உடலை ஓய்வுபடுத்தவும், பிராமரி பிராணாயாமம் மூளையைக் குளிர்விக்கவும் உதவுகிறது. இரவில் தூக்கமின்மை மற்றும் கெட்ட கனவுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது ஒரு வரம். இது போன்ற யோகாசனங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தால் எப்போதம் நேர்மறை சிந்தனையுடன் இருப்பார்களாம். இது போன் பார்ப்பதை குறைப்பதுடன் அவர்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories