தண்ணீர் வைத்தியம் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா..? உடனே தெரிஞ்சுக்கோங்க..!!

First Published | Jan 28, 2023, 1:17 PM IST

நமது உடலுக்கும் தசைகளுக்கும், மூளைக்கும் தண்ணீர் இன்றியமையாதது. இரத்தம் நமது உடல் எடையில் 83 சதவிகிதம் ஆகும், அதில் தண்ணீர் ஒரு பெரிய பகுதியாகும்.
 

எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சுமார் 1.5 லிட்டர் தண்ணீர் அல்லது 6 டம்ளர் தண்ணீர் குடிப்பது பல்வேறு வகையில் உடலுக்கு நன்மை சேர்க்கிறது. இந்த பயிற்சி துவங்குவதற்கு சற்று சிரமமாக இருக்கும். ஆனால் தொடர்ந்து பழக்கப்படுத்தி வந்தால், உங்களுடைய உடலுக்குத் தான் நன்மை கிடைக்கும். ஒரே நேரத்தில் 1.50 லிட்டர் குடிக்க முடியாதவர்கள் ஒரு நேரத்தில் சிறிது சிறிதளவு இடைவெளி விட்டு குடிக்கலாம். இந்த வழியில் தண்ணீர் குடிப்பது உங்கள் குடல்களை சுத்தப்படுத்தவும், உங்களை நன்றாக உணரவும், தலைவலியைத் தடுக்கவும், எடையைக் குறைக்கவும், மென்மையான சருமத்தை  பெறவும் உதவுகிறது. 
 

கிடைக்கும் நன்மைகள்

தண்ணீர் குடிப்பதை முறையாக்கினால் உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை கிடைக்கிறது. முகம் பொலிவு பெறும், உடல் கொழுப்பு நீங்கி  உடல் எடை குறையும். இதன்மூலம் உங்களுடைய உடலுக்கு இளமையும் கவர்ச்சியும் கிடைக்கும். தொடர்ந்து தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலுக்கு சுறுசுறுப்பு கிடைக்கும், அதனால் நாள் முழுவதும் சிறந்த ஆற்றலுடன் செயல்படுவீர்கள்.  உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு இரண்டும் கட்டுக்குள் இருக்கும் என பல்வேறு மருத்துவ ஆதாரங்கள் கூறுகின்றன.

Tap to resize

உடல் சுத்தமாகும்

ஒவ்வொரு நாளும் மனித உடல் பில்லியன் கணக்கான கழிவுகளை உற்பத்தி செய்கிறது. நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், கழிவுகள் மேலும் அதிகரித்துவிடும். அதற்கு சரியான உணவுப் பழக்கங்களை பின்பற்றுவது, துரித உணவுப் பழக்கங்களை கைவிடுவது போன்ற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும். அதனால் சராசரியான அளவில் உடலில் கழிவுகள் தங்கி வெளியேறுவதற்கு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாகும். 

ஆற்றல் பெருக்கும்

தண்ணீர் மூலமாகத்தான் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்ல முடிகிறது. அதற்குரிய ஆற்றலை பெறுவதற்கு நாம் வேண்டிய தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நிறைய தண்ணீரை குடிப்பதன் மூலம், உடலின் வெப்பம் சீரான அளவில் இருக்கும். நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், பல்வேறு உடல்நல பாதிப்புகளை விளைவிக்கும்.
 

அசிடிட்டி பாதிப்பு இருக்காது

வயிற்றில் சுரக்கப்படும் நொதி அமிலத்தன்மை கொண்டது. முறையாக சாப்பிடாமல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் இருந்தால், வயிற்றுள்ள அமிலத்தன்மை பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். அத்தகைய பிரச்னைகளை கொண்டவர்கள், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். இதன்மூலம் வயிறு அமைதியாக இருக்கும். முகத்தில் அதிகப்படியான அழுக்குகள் சேர்வதால் தான், முகப்பரு போன்ற பிரச்னைகள் உருவாகின்றன. அதை தடுக்கவும், அதிகளவு தண்ணீர் குடிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

தசைப்பிடிப்புகள் இருக்காது

தண்ணீர் குறைவாக குடிப்பதால் பலருக்கும் அவ்வப்போது தசைப்பிடிப்புகள் ஏற்படக்கூடும். அதற்கு காரணம், உடலில் 80 சதவிகிதம் தசைகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. போதிய தண்ணீர் இல்லாமல் போனால், கழிவுகள் குவிந்து தசைப்பிடிப்பை ஏற்படுத்துகிறது. அதை தடுக்க உடலுக்கு தேவையான அளவில் தண்ணீரை குடிப்பது மிகவும் அவசியமாகிறது. இதன்காரணமாக உடலுக்கு வேண்டிய வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து, மனித உடலுக்கு அனைத்துவிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
 

Latest Videos

click me!