மோமோஸ் சாப்பிடணும்னு நினைக்கிறீங்களா? அப்போ மருத்துவமனைக்கு செல்ல ரெடியா இருங்க..!!

First Published May 30, 2023, 1:34 PM IST

Momos Side effects: மோமோஸ் என்ற பெயரைக் கேட்டாலே வாயில் எச்சில் வரும்.  இன்றைய காலகட்டத்தில் மோமோஸ் மோகம் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே காணப்படுகிறது.  ஆனால் இந்த மோமோஸ் அதிகமாக சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் மோமோஸை மிகவும் விரும்புகிறார்கள். உணவகம் முதல் தெரு வரை மோமோஸ் எளிதாகக் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள். இந்தியாவிலும் மோமோஸ் பிரியர்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக வட இந்தியாவில் மோமோஸ் மிகவும் பிரபலமானது. மோமோக்களை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். மேலும், மோமோஸ் உடன் வரும் ரெட் சட்னி உங்களை கொல்லும்.  நீங்கள் மேலே மோமோஸ் சாப்பிடுகிறீர்கள் என்றால், மருத்துவமனைக்கு செல்ல தயாராக இருங்கள்.  

உடல் பருமன்:
மோமோஸ் தயாரிப்பதற்கு மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. மைதாவில் அதிக அளவு ஸ்டார்ச் உள்ளது. இது பருமனை அதிகரிக்க செய்யும். மைதா மாவு அதிகமாக சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை அதிகரிக்கிறது. எனவே சரியான நேரத்தில் கவனமாக இருங்கள் இல்லையெனில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

கணைய காயம்:
மோமோஸை மென்மையாக்க அசோடிகார்போனா மிட், பென்சாயில் பெராக்சைடு போன்ற பொருட்கள் மைதா மாவில் சேர்க்கப்படுகின்றன. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானது. மேலும் இது உடலின் கணையத்தை சேதப்படுத்தும்.

சர்க்கரை நோய்:
மோமோஸை மென்மையாக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் கணையத்தைச் சேதப்படுத்துகின்றன. அதனால் இன்சுலின் ஹார்மோன் சரியாகச் சுரக்கப்படாமல் சர்க்கரை நோயின் அபாயம் அதிகரிக்கிறது. மோமோஸ் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகம்.

இதையும் படிங்க:Is Daily Sex Good for Health: தினமும் உடலுறவு கொள்வது ஆரோக்கியமா? ஆபத்தா?

மோசமான பொருட்களைப் பயன்படுத்துதல்:

அசைவ மோமோக்களை விரும்புபவர்கள் மோமோஸை மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள். ஆனால்
அதில் சேர்க்கப்படும் சிக்கன் அல்லது மட்டன் ஃபில்லிங் பெரும்பாலும் தரமில்லாமல் இருக்கும். எனவே, நீங்கள் பல நோய்களை அழைக்கிறீர்கள்.
 

சிவப்பு சட்னி மிகவும் ஆபத்தானது:

சிவப்பு சட்னி உடன் மோமோஸ் சாப்பிடுவது தனி சுவைத் தரும். ஆனால் இந்த சட்னி உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதிக காரமான உணவுகளை உட்கொள்வது பைல்ஸ் போன்ற நோய்களை உண்டாக்கும்.

click me!