Omega-3 Foods: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த 10 உணவுகள்! இது சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா?

Published : Apr 18, 2026, 04:08 PM IST

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நம்ம உடலுக்கு ரொம்ப அவசியமான ஒரு வகை பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு. இதுல ALA, EPA, DHA-ன்னு மூணு முக்கிய வகைகள் இருக்கு.

PREV
17
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த 10 உணவுகள்

உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் (Omega-3 Fatty Acids) ஒரு மிக முக்கியமான சத்தாகும். இது ஒருவகை "நல்ல கொழுப்பு" (Essential Fats). நம் உடலால் இதனைத் தானாக உற்பத்தி செய்ய முடியாது என்பதால், உணவின் மூலமாகவே இதனைப் பெற வேண்டும். இதில் ALA, EPA, DHA என மூன்று முக்கிய வகைகள் உள்ளன. ஒமேகா-3, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. ட்ரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்தி, இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. இதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

27
மூளையின் வளர்ச்சிக்கு ஒமேகா-3 முக்கியம்

மூளையின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் ஒமேகா-3 ரொம்ப முக்கியம். ஒமேகா-3 நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நினைவாற்றலை மேம்படுத்தும். மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றைக் குறைக்கவும் இது உதவும். உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய ஒமேகா-3 உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

37
வால்நட் இரத்த அழுத்தத்தை குறைக்கும்

வால்நட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் குறையும். இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, சில நாள்பட்ட நோய்கள் வரும் அபாயத்தையும் குறைக்கிறது.

47
சியா விதைகள்
சியா விதைகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமுள்ளது. குறிப்பாக, ஆல்ஃபா-லினோலெனிக் ஆசிட் (ALA) இதில் அதிகம். மூளையின் ஆரோக்கியத்திற்கு ALA மிகவும் அவசியம். இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
57
ஆளி விதைகள் செரிமான மேம்படுத்தும்
உங்கள் உணவில் ஆளி விதைகளைச் சேர்ப்பது செரிமானத்தை மேம்படுத்தும். இது இதய நோய் அபாயத்தைக் குறைத்து, ஆரோக்கியமான சருமம் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
67
பிரக்கோலி
பிரக்கோலியில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் (ALA) குறைந்த அளவில் இருந்தாலும், அது நன்மை தரக்கூடியது. 100 கிராம் பச்சை பிரக்கோலியில் சுமார் 0.02 முதல் 0.49 கிராம் வரை ஒமேகா-3 உள்ளது. இது நார்ச்சத்து, வைட்டமின்கள் சி, கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் உடலுக்கு வழங்குகிறது.
77
சோயாபீன்ஸ்
சோயாபீன்ஸ், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த மற்றொரு முக்கிய உணவு. டோஃபு, சோயா பால் போன்ற சோயா உணவுகளைச் சாப்பிடுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். மேலும், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மெனோபாஸ் அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
Read more Photos on
click me!

Recommended Stories